கையெழுத்துப் போட்டு பியூனிடம் சர்க்குலரைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தவரிடம், “சிம்போசியம்”னா என்ன மேம் என்றாள் ஒரு மாணவி. கருத்தரங்குன்னு சொல்வோம் இல்லையா அதுமாதிரி, சில டாபிக்ஸ் கொடுப்பாங்க,அதுல செமினார், பேப்பர் பிரெசென்டேசன், குவிஸ் ப்ரோக்ராம், எர்ரர் கண்டுபிடிக்கறது, கோடிங் பண்றதுன்னு நிறைய போட்டிங்களும் வைப்பாங்க. கலந்துக்கோங்க! என்றார்.
சில நிமிடங்களில், மறுபடியும் பியூன் வந்து, மேடம் இந்த கிளாஸ்ல இருந்து ஒரு மாணவியையும், ஏ செக்சன்ல ஒரு மாணவியையும் உடனே ஹெச்ஒடி வரச்சொன்னாங்க.
மாணவிகள் பிரதிநிதி, கிளம்புங்க என்று மேம் ரம்யாவை அனுப்பி வைக்க, ஏ செக்சனிலும் இருந்த பெண்ணும் வெளியே வந்தாள், எனவே இருவரும் சேர்ந்தே அவரின் அறைக்கு விரைந்தனர்.
உள்ளே ஒருவர் இருந்தார், அவரிடம் பேசிக்கொண்டே இருந்தார், கண்ணாடி அறைக்குள் இருந்ததால் ஒன்றும் கேட்கவில்லை. நேரம் சென்று கொண்டிருக்க, படபடப்பும் கூட, “பர்ஸ்ட் இயரா ?உள்ளே வாங்க !” எனவும் சிறிது பயத்துடன் உள்ளே நுழைந்தனர்.
தொடர்வேன்
Next episode will be published on 13th Dec. This series is updated weekly on Sunday mornings.