Page 8 of 8
உழைப்பு அபரிமிதமா இருக்கணும்... முயற்சியும் இருக்கணும்... நாம செய்யப்போகும் வேலைக்கு எது தேவையோ அதை வளர்த்துக்க நூறு சதம் முயற்சி பண்ணனும்.... ”, என்று கூறி முடித்தாள்
“உங்கள் விளையாட்டை போலவே பேச்சும் அபாரம் மைத்ரேயி....”, என்று வர்ணனையாளர் கூற கைத்தட்டல் வானைப் பிளந்தது....
அடுத்ததாக உலகக்கோப்பையை அணியின் தலைவி பெற்றுக்கொள்ள கொண்டாட்டம் ஆரம்பமானது...
இப்படியாக மைலாப்பூர் ஒண்டுக்குடித்தனத்தில் ஆரம்பித்த மைத்தியின் கனவு பல பேரின் முயற்சியால் திருவினையானது.... இன்னும் நம் நாட்டில் பல வீடுகளில் மைத்தியைப் போல் கனவுகளுடனும், அபாரத் திறமையுடனும் நிறைய பேர் இருக்கிறார்கள்.... அவர்களின் கனவும் நிறைவேற அவர்கள் குடும்பமும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கையுடன் சுபம் போடுகிறேன்....
சுபம்