(Reading time: 5 - 10 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

கூவினாள்.

“ஏய்...அதைப் பத்தி நீ பேசாதடி!” சம்பூர்ணம் சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுக்க,

“இந்தா பெருசு...இப்படி “டீ” போட்டுப் பேசற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே!...அப்புறம் நானும் வயசானவள்னு கூடப் பாக்காம “டீ”போட்டுப் பேசிடுவேன்!”

“ஓ...அவ்வளவு தைரியமாயிடுச்சா உனக்கு?...தெரிஞ்சு போச்சு...எனக்குத் தெரிஞ்சு போச்சு!...உனக்கு இந்த தைரியம் எப்படி வந்தது?...எங்கிருந்து வந்திச்சு?...யாரு கொடுத்தது?...எல்லாம் தெரிஞ்சு போச்சு!”

சொல்லும் போது சம்பூர்ணத்தின் பார்வை அவளையுமறியாமல் அர்ச்சனாவின் வீட்டுப் பக்கம் வந்து விட்டு போனது.

வீட்டிற்குள்ளிருந்த அர்ச்சனாவிற்கு அது நன்றாகவே புரிந்தது. வீட்டு ஓனர் சம்பூர்ணம் தன்னைத்தான் ஜாடை போட்டுப் பேசுகிறாள் என்று. இதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் அர்ச்சனா இன்னேரம் பாய்ந்தோடிச் சென்று, பட்டையைக் கிளப்பியிருப்பாள். ஆனால், இன்று அவளே மனம் நொந்த நிலையில் இருந்த காரணத்தால் அமைதியாய் அடங்கியிருந்தாள்.

அந்த மாப்பிள்ளைப் பையனை அவன் வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று அவள் வசை பாடிவிட்டு வந்ததற்குப் பிறகு, அவள் வீடே அவளுக்கு அன்னியமாய்ப் போனது போல் உணர்ந்தாள்.

அக்கா சுலோச்சனா அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினாலே தவிர முன் போல் சரளமாய்ப் பேசுவதில்லை.

அம்மா பார்வதி, அடிக்கடி பேசினாலும் அந்தப் பேச்சு அனைத்தும் அவளைச் சாடும் பேச்சாகவும், திட்டுக்களாகவுமே இருந்தன.

அப்பா தேவநாதனோ...சுத்தமாகவே அவளுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

அர்ச்சனாவிற்கு சில சமயம் வீட்டிற்கு வருவதற்கே வெறுப்பாயிருக்கும், “ச்சை...எப்படியிருந்த வீடு..இப்படியாகிப் போனதே!” மனசு தாளாமல் தான் செய்த செயலுக்காக தன்னைத் தானே நொந்து கொள்வாள். வேறென்ன செய்ய முடியும்?

****

தொடர்ந்து சில தின்ங்களாகவே அர்ச்சனா முக வாட்டத்துடனும், மனச் சங்கடத்துடனேயே உலவுவதைக் கண்ட அலுவலகத் தோழி சவிதா கேட்டாள், “என்ன அர்ச்சனா...மறுபடியும் வீட்டுல ஏதாவது பிரச்சினையா?”

“ம்ஹும்...அந்தப் பழைய பிரச்சினையே இன்னும் ஓடிட்டிருக்கு!”

“என்ன சொல்றே?”

“எங்க வீட்டுல என்னைத் தவிர இருக்கற அந்த மூணு பேருமே என்னைத் தனிமைப் படுத்தி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.