ஒரு வித பதட்டம் அவனை தொற்றிக்கொள்ள அவளை பின்தொடர்ந்தான்.
ஒரு காஃபி ஷாப்பில் நுழைந்து இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அவள் அமர்ந்தாள்.
அவன் அவள் எதிரே அமர்ந்தான்.
அவள் அவனை கூர்ந்து பார்த்து, எதுக்கு இவ்ளோ நெர்வஸ் - ஆ இருக்கிங்க..... பீ கூல்......
அவன் கையில் இருந்த கர்சீஃபை எடுத்து அவன் முகத்தினை துடைத்துக் கொண்டே.... கஷ்டப்பட்டு அவன் சிரிக்க.....
அவனை பார்த்த அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஏங்க நான் என்ன சிங்கமா!!! புலியா!!! இப்புடி இருக்கிங்க.... கம்ஃபர்டபுளா இருங்க....
ம்ம்..... தயக்கத்துடன் வந்தது.
சோ...... என்ன பார்க்க ஆரம்பிச்சு மூனு வாரம் ஆச்சு..... இது லவ்வா..... இல்ல வெறும் சைட்டா......
அவன் பேந்த பேந்த முழிக்க.....
அவள் உதட்டில் ஒரு குருநகை தவல... அவனிடம் பேசினாள்.
சொல்லுங்க.....
(இது தாண்டா சான்ஸ் நீயாவே கண்டிப்பா அவ கிட்ட லவ் - வ சொல்ல மாட்ட அவளே கேக்குறா ஆமா சொல்லு ஆமா சொல்லு)
உங்க ...... தொண்டையை சரிபடுத்திக்கொண்டு உங்கள எனக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம். என் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம் வறுமை நிலையில தான் நாங்க இருக்கோம்..... எனக்கு கூட பொறந்தவங்க நாலு பேர்..... இரண்டு அண்ணா...... ஒரு தம்பி.....ஒரு தங்கச்சி.... அண்ணா இரண்டுபேருக்கும் சொந்தத்துலயே கல்யாணம் முடிச்சிட்டாங்க.... தம்பி ஆர்ட்ஸ் காலேஜ்-ல பி.காம் இரண்டாவது வருஷம் படிச்சிட்டு இருக்கான். தங்கச்சிக்கு சொந்த மாமா பையன் கல்யாணம் பண்ணியாச்சு...... எங்க வீட்ல நான் மட்டும் தான் வேலைக்கு போறேன். அண்ணா இரண்டுபேருக்கு படிப்பு ஏறலனு. படிக்க வைக்கல.... வேலை எதுவும் கிடைக்கலனு வீட்ல சும்மா தான் இருக்காங்க..... அப்பாக்கு நூறு நாள் வேலை கிடைக்கிறப்ப போய்ட்டு வருவாங்க...... இது தான் என் குடும்பம். நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா நான் உங்கள பத்திரமா பார்த்துக்குவேன். நீங்க கேக்குறது வாங்கி தர முடியலனாலும், மனசளவுல உங்கள நான் சந்தோசமா வச்சுப் பேன். என்ன கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?????
தொடரும்