(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. அதோடு விவசாயிகள் வாழ்வில் இந்நாள் ஒரு பொன்னாள் என்று சுரேந்தர் சுமித்ரா ரிசர்ச்ன் விளைவால் கண்டுபிடிக்கப்பட்ட நவீனங்கள் பட்டியல் போட்டு காட்டப்பட்டன...

இனி வெயிலோ புயலோ மழையோ வறட்சியோ கவலை இல்லை... விவசாயம் செழிக்கும்... வாழ்வு மலரும் என்று மகிழ்ச்சியான செய்திகள் அறிவிக்கப்பட்டன...

அதோடு இன்னும் இரண்டு நாட்களில் சாதனை புரிந்த குயிலிக்கு இந்த ஆண்டிற்கான வீர மங்கை விருது வழங்கப்பட இருக்கிறது. அதோடு விஞ்ஞானிகள் சுரேந்தர் சுமித்ரா இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்படும். இது அனைத்திற்கும் காரணமான கார்த்திக்கிற்கு சாதனை நாயகன் விருதும் அவரது நண்பர்கள் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொள்வதால் டெல்லி விழாக்கோலம் பூண்டு இருக்கிறது என்று சரளமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருந்தாள் அந்த செய்தி வாசிப்பாளினி...

அந்த சமயம் அறைக்குள் வேகமாக நுழைந்த சங்கர் குயிலி சீக்கிரம் தயாராகுங்கள்... நாம் டெல்லி செல்ல வேண்டும் என்று சொல்ல குயிலியோ அவன் முகம் பார்த்தாள்...

கார்த்திக் உங்க அம்மா அப்பாவோடு பத்திரமாக வந்து விடுவான்... இன்னும் தகவல் ஏதும் வரவில்லை என்று சொல்ல குயிலிக்கு கலக்கமாக இருந்தது.

புஷ்பா மல்லிகா இருவரும் சத்யாவை பார்க்க சென்றார்கள். சத்யாவை கைது செய்து நான்கு நாட்கள் தான் ஆகி இருந்தது. ஆனால் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்தான். அவனைப் பார்த்ததும் மல்லிகாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சேலை முந்தானையால் வாயைப் பொத்தி கொண்டாள்.

அடுத்தவர்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் அரக்கனாக இருந்தாலும் தன் மனைவி பிள்ளைகள் என்றால் தனிப்பாசம் இருக்கும் தானே... அது சத்யாவின் காதல் மனைவி ஆயிற்றே மல்லிகா... முதல் முறையாக அவள் நிலையை எண்ணி பார்த்தான்.

அண்ணி... மல்லிகா தனியாக கடைக்கு கூட சென்றது இல்லை... அவள் எவ்வளவு படித்து இருந்தாலும் என் துணையில்லாமல் எதையும் செய்து கொள்ளும் திறன் அற்றவள்... அவளுக்கு தேவையானதை செய்து கொடுங்கள் என்றான் புஷ்பாவிடம்...

ஆனால் புஷ்பாவோ அது எதையும் கவனித்ததாக தெரியவில்லை... புஷ்பாவின் இந்த செயல் மல்லிகாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை... ஆனால் சத்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

அண்ணி... மல்லியை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கும் முன்பே கோபமாக உங்கள் அண்ணா பற்றி எந்த தகவலும் இல்லை... அதைப் பற்றி உனக்கு கவலை இல்லையா

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.