(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

சத்யா என்றாள்.

சத்யா மௌனமாக நிற்க, உங்கள் அண்ணா பெயரில் என் பெயரில் உன் அண்ணன் பெயரில் இருந்த எல்லா சொத்துக்கள் பேக் அக்கௌன்ட் எல்லாம் முடக்கப்பட்டு விட்டது. இந்த நேரத்தில் நான் என்ன உதவி செய்ய முடியும்.... உங்கள் அண்ணன் வேறு யார் பெயரிலாவது ப்ராபட்டி வைத்து இருக்கிறார்களா என்று சொல் என்றாள் அலட்சியமாக...

அண்ணி... உங்கள் தூரத்து உறவினர் ஒருவர் பெயரில்...

அது தெரியும் சத்யா... அதை வைத்து தான் நானும் என் குடும்பமும் வாழ வேண்டும். அதோடு உன் அண்ணாவை காப்பாற்ற வழி தேட வேண்டும்... வேறு ஏதாவது...

எனக்கு தெரியவில்லை அண்ணி..

சரி... உன் குடும்பத்திற்கு என்று நீயும் ஏதாவது சேர்த்து வைத்து இருப்பாய் தானே... அதை அவளிடம் சொல்லி பிழைக்க வழியை தேடிக் கொள்ள சொல் என்று சொல்லி விட்டு சென்று விட அடிப்பட்ட பாம்பாக சீறிக்கொண்டு நின்றான் சத்யா...

அவனின் கரத்தை ஆதரவாக பற்றியவள் எதற்கும் கவலைப்படாதீர்கள்... சீக்கிரம் உங்களை வெளியே எடுக்க முயற்சி செய்றேன் என்றாள் மல்லிகா...

என்னை வெளியே எடுப்பது சுலபம் இல்லை மல்லி... அண்ணிக்கு தேவையான பணத்தை அண்ணா அவர்களுக்கு விட்டு விட்டு தான் சென்று இருக்கிறார். அண்ணா பார்த்து கொள்வார்... அண்ணா பார்த்து கொள்வார் என்று சொல்லி உன்னை தான் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டேன் என்று கலங்கினான் சத்யா...

உணவு பொருட்கள் என்ற பெயரில் கண்டு பிடிக்க முடியாத நச்சு பொருட்களால் நிரப்பி அநேகரை நடுத்தெருவில் நிற்க வைத்தவற்கு நீங்கள் உறுதுணையாக நின்றதற்கு கடவுள் நமக்கு கொடுத்த பரிசு... முடிந்தது முடிந்து போச்சு... நம்ம பையன் படிப்பு முடிந்து விட்டது... அதனால் அவனைப் பற்றி கவலை இல்லை... பொண்ணுக்கும் பீஸ் கட்டியாச்சு அதனால் பிரச்சினை இல்லை... உங்களை மட்டும் வெளியே கொண்டு வர வேண்டும்... ஆனால் பணம்...

மல்லி... என்னை வெளியே கொண்டு வருவது முடியாத காரியம். அண்ணி நினைத்தால் மட்டும் தான் முடியும்...

அப்படி என்றால் அவர்கள் காலில் விழுந்தாவது உங்களை வெளியே கொண்டு வருகிறேன்...

காலில் விழுந்தாலும் கழுத்தை பிடித்து வெளியே தான் தள்ளுவார்கள்.. அவர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதனால் நீ என்னை பற்றி கவலைப்படாமல் உனக்காக வாழ்... 

நீங்கள் இல்லாமல் நான் எப்படி என்று சொல்லும் போதே கண்களில் நீர் வழிந்தது...

மல்லியின் பாசம் சத்யாவின் மனதை தொட்டது. கொஞ்ச காலம் கிடைத்தால் என் மல்லியின் அன்பிற்காகவே வாழ வேண்டும் என்று நினைத்தவன் மல்லி... யார் என்னை கைவிட

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.