“ஏன் நல்லா சமைக்கறான் ஓட்டலோ மெஸ்ஸோ ஆரம்பிக்கட்டும் இல்லையா இருக்கவே இருக்கு நெசவு அதை செய்யட்டும்”
“மெஸ் வைக்க பணம் தேவை நெசவு செய்ய பட்டு நூல் தேவை எல்லாத்துக்கும் பணம் தேவை அவன்ட்ட அது இல்லை பாவம் கஷ்டப்படறான்ப்பா”
“ம் புரியுதும்மா அதுக்காக அவனுக்கு உதவி செய்ய முடியாதே நம்மால என்ன செய்ய முடியும் சொல்லு”
“தெரியலைப்பா சொல்லனும்னு தோணிச்சி சொன்னேன். அவனுக்கு வேலை கிடைச்சா சரி இல்லைன்னா ரொம்பவே கஷ்டப்படுவான்”
”அவன்கிட்ட படிப்பும் இல்லை உத்தியோகம் கிடைக்கறது கஷ்டம்தான் வரட்டும் சாயங்காலம் பார்க்கலாம் என்ன ஏதுன்னு கேட்கலாம் நம்மால முடிஞ்ச அட்வைஸ் பண்ணலாம் அதுக்கு மேல எதையும் செய்ய முடியாதும்மா” என சொல்லவும் லஷ்மியும் ஹரியை நினைத்து யோசிக்கலானாள்.
மாலையில் வீட்டுக்கு வந்தான் ஹரி. மிகவும் சோர்வாக இருந்தான். அமைதியாக வந்தவன் முற்றத்தில் இருந்தவர்களை பார்த்தும் பார்க்காமல் தன் அறைக்கு சென்றுவிட்டான். முற்றத்திலிருந்த கேசவன், லஷ்மி, தாத்தா 3 பேரும் ஹரி பேசாமல் போவதை பார்த்து வருத்தப்பட்டார்கள். கேசவன் லஷ்மியிடம்
”காபி கொண்டு வாம்மா” என சொல்லிவிட்டு எழுந்து ஹரியை பார்க்கச் சென்றார். லஷ்மியும் காபி தயார் செய்து எடுத்துக் கொண்டு மாடியேறினாள். தன் அறையில் கேசவன் இல்லாமல் போகவே பக்கத்து அறையான ஹரியின் அறைக்கு சென்றாள். அங்கு கேசவன் ஹரியிடம் கத்திக்கொண்டிருந்தார்
”அறிவிருக்காடா உனக்கு வேலை செய் அதுக்காக இப்படியா பாரு உன் கையெல்லாம் எப்படி ஆச்சின்னு நீ ஏன்டா மூட்டை தூக்கின”
“வேற வேலை கிடைக்கல மாமா”
“அதுக்கு உன்கிட்டயே சொந்த தொழில் இருக்கு திறமையிருக்கு அதுல வேலை செய்யாம எதுக்கு இப்படி கஷ்டபடனும்”
“எந்த தொழில் செஞ்சாலும் முதல் போட பணம் வேணும் மாமா அது என்கிட்ட இல்லையே”
”உன் சொந்த தொழில் செய் புடவைகளை நெஞ்சி விலைக்கு வித்துடு மாசத்துக்கு ஒரு பத்தாயிரம் இல்லை இருபதாயிரம் சம்பாதிச்சா கூட போதுமே அழகா குடும்பம் நடத்தலாம்” என அவர் சொல்லவும் ஆசையாக அவரைப் பார்த்து
“அப்படியா மாமா அப்ப நானும் புடவைகளை நெய்யறேன் விக்கறேன் உங்க பொண்ணை