I adore you like a bee loves the flowers. You are my honey, my dream, my everything!
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ஹரீஷ் இப்போது மொத்தமாக உடைந்துப் போனான். நிலா பக்கத்தில் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நிலாவிடம் பேச வேண்டும். பேசியே ஆக வேண்டும். அறைக்கு உள்ளே இருந்து இப்போதும் பேச்சு சத்தம் கேட்டது. ஆனால் தெளிவாகப் புரியவில்லை. கதவை தட்டப் போன ஹரீஷ் மனதை மாற்றிக் கொண்டு சாவி வைத்து கதவை திறந்து உள்ளே சென்றான்.
அங்கே அவன் நினைத்ததுப் போலவே நிலா கையிலிருந்த மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
யோசிக்காமல் வந்திருந்ததால், சட்டென்று என்னப் பேசுவது, எப்படி நிலாவை சமாதானப் படுத்துவது என்று ஹரீஷ்க்கு புரியவில்லை.
“சுபி - - -“ – யோசிக்க நேரம் கிடைக்க அவளின் பெயரை பொறுமையாக உச்சரித்தான் ஹரீஷ்.
அடுத்து நடந்தது அவன் முழுக்க முழுக்க எதிர்பார்த்திராத ஒன்று!
“ஹரீஷ்! ஐயையோ சாரி சாரி சாரி ஹரீஷ்” – நிலா மூச்சு விடாமல் சாரி சொல்லிக் கொண்டே இருந்தாள்.
நிலா எதற்கு சாரி சொல்கிறாள் என்பது ஹரீஷ்க்கு புரியவில்லை. அதற்காக அவளை அப்படி மன்னிப்பு கேட்க விடவும் அவனுக்கு மனம் வரவில்லை. யோசிக்க நொடியும் எடுத்துக் கொள்ளாமல் அவளை இழுத்து தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.
“ஹரீஷ்” – ஹரீஷின் செய்கையில் திகைத்து அவன் பெயரை சொன்னதை தாண்டி நிலா வேறு எதுவும் சொல்லவில்லை. அவனை தள்ளி விடவில்லை ஒதுங்கியும் போகவில்லை.
முதலில் இது எதையும் ஹரீஷ் கவனிக்கவில்லை. நிலா அவனுக்கு வேண்டும் என்ற யோசனை மட்டும் இருந்தது. அவளை தொட்டு அணைத்துக் கொண்டது அவனுக்கு மிகப் பெரிய நிம்மதி உணர்வை கொடுத்தது. நிலாவும் என்ன நினைத்தாளோ அமைதியாக அவனின் அணைப்பில் அடங்கி இருந்தாள்.
நொடிகள் மெதுவாக நகர்ந்துச் சென்று ஹரீஷ் மெல்ல இயல்புக்கு திரும்பினான்.
நிலாவை விடுதலை செய்து சின்ன இடைவெளி விட்டு தள்ளி நிறுத்தினான்.
“நிலா - - -” – சுபி என்று கூப்பிட்டு சுபாஷை ஞாபகப்படுத்த அவனுக்கு விருப்பம் இல்லை.
நிலா அவனைப் பாவமாக பார்த்தாள். அந்த பார்வைக்கு அர்த்தம் (எப்போதும் போல!!!) அவனுக்குப் புரியவில்லை.
“சாரி ஹரீஷ்” – திரும்பவும் நிலா சாரியை தொடர்ந்து சொல்லவும், ஹரீஷ்க்கு குழப்பமாக இருந்தது. இவள் எதற்கு சாரி சொல்கிறாள்???
Lovely, cute and lively story ma'am 👏 👏👏👏👏
Nila serial pakura aunty ya marinalum avanga smartness superrrrr
Series la vara Ella couples um adorable and super cute 😍😍😍
Thank you.