எழுந்தாள்.
தீப்தியுடன் கடைக்கு சென்றவளைப் பார்த்த அபியும் வெங்கடேசனும் சந்தோஷப்பட்டனர். லஷ்மிக்கு புடவை டிசைன் பற்றி தெரியாததால் தீப்தி மற்றவர்களிடம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அங்கு அபியும் தீப்தியும் பேசிக்கொண்டிருக்கவே அவள் அந்த கடையை சுற்றி சுற்றிப் பார்த்தாள்.
அங்கு வந்த பெண்களுக்கு புடவை காட்டிக்கொண்டிருந்த வெங்கியும் அபியும் அவளைப் பார்த்து அவளை அழைத்து மாடலாக்கி அவள் மேல் புடவைகளை வைத்து காட்டி வியாபாரம் செய்துக் கொண்டிருந்தனர். இதைப்பற்றி சின்னா மூலம் தகவல் அறிந்து கோபமாக கடைக்குள் நுழைந்த ஹரி அவளை பார்த்து முறைத்தான்.
”இங்க நீ என்ன செய்ற”
“இல்லை கடையை சுத்திப்பார்க்க வந்தேன்”
”சுத்திப்பார்க்காம இங்க என்ன செய்ற, நீ என்ன துணிக்கடை பொம்மையா எழு முதல்ல” என அவளை எழுப்பினான் வெங்கி அவனிடம்
”டேய் என்னடா இங்க வந்து கத்தற உன் கத்தலெல்லாம் உன் வீட்ல வைச்சிக்க”
“அதையேதான் நானும் சொல்றேன், வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்படிதான் பொம்மையை போல நடத்துவீங்களா பெரியப்பா, தாத்தா கிட்ட இதப்பத்தி சொன்னா என்னாகும்னு யோசிங்க” என அவரிடம் சொல்ல உடனே அவர் அமைதியானார்.
லஷ்மி பக்கம் திரும்பி அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறி வீட்டிற்குள் சென்றான். பின்னாடியே தீப்தியும் வந்தாள். கேசவன் அறைக்குள் வந்த ஹரி அவரிடம் லஷ்மியை விட்டான்.
”என்னாச்சிம்மா” என அவர் குழப்பமாக லஷ்மியை கேட்க
”அதை நான் சொல்றேன் மாமா” என ஹரி கத்தினான் அவரைப் பார்த்த கேசவன்
”என்னாச்சி நீ ஏன் இப்படி கோபமா கத்தற”
“கத்தாம உங்க பொண்ணுக்கு அறிவில்லை யார் என்ன சொன்னாலும் அப்படியே செய்வாளாம்மா, இன்னிக்கு கடையில ஒரு துணிக்கடை பொம்மை மாதிரி நிக்கறா, அவள் மேல புடவையை போட்டு வர்றவங்க போறவங்களுக்கு காட்டிக்கிட்டு இருக்காங்க இது தப்பில்லையா”
“உதவி செய்றதுல என்ன தப்பு” என லஷ்மி கேட்கவும்
”தாராளமா உதவி செய் ஆனா இப்படி செய்யாத உன்னை நான் அந்த இடத்தில பார்த்தப்ப எவ்ளோ கஷ்டமாயிருந்திச்சி தெரியுமா, அவங்க சுயநலத்துக்காக உன்னை நிக்க வைக்கறாங்க இதையா நீ உதவின்னு சொல்ற.