”இல்லை உண்மையை சொல்றேன்”
“சரிம்மா நீ கிளம்பு உனக்கு என்னை பிடிக்கலைல்லை அப்ப என்கிட்ட வராத, பாட்டிகிட்டயே போய் சமையல் கத்துக்க போ” என விரட்டினான் ஹரி
தள்ளி போகாமல் அவனையே முறைத்தாள் லஷ்மி அவளைப் பார்த்து
”என்ன போ”
“நீ வான்னா வரனும் போன்னா போகனும் நான் என்ன உன் அடிமையா” என கத்தினாள் அவளுக்கு சிவசங்கரன் ஞாபகத்திற்கு வந்துவிட்டார்.
”நான் அப்படி சொல்லலை போதுமா கிளம்பு”
“நீ ஒரு மோசமானவன், அடுத்தவங்களை பத்தி கொஞ்சம் கூட நினைக்காம அவங்களை கஷ்டப்படுத்தி பார்க்கறவன்” என சொல்லவும் ஹரிக்கு உண்மையிலே கோபம் வந்தது
”இரு நான் யாரை கஷ்டப்படுத்தி பார்த்தேன்”
“என்னைத்தான் இப்ப நீதானே என்னை விரட்டின, நான் ஒண்ணும் உனக்காக வரலை கோயிலுக்கு தர்ற பிரசாதத்திற்கு சமைக்க வந்தேன், ஆனா நீ உனக்கே புண்ணியம் வேணும்னு சுயநலமா எனக்கு கிடைக்க கூடாதுன்னு விரட்டற” என சொல்லவும்
”உன் வாயில ஒரு நாளும் நல்லதா நினைக்க தோணாதா சரிம்மா இந்தா கரண்டி நீயே இன்னிக்கு சமையல் பண்ணு, எல்லா புண்ணியத்தையும் வாரிக்கட்டிக்க வா பிடி” என சொல்ல அவளும் வந்து கரண்டியைப் பிடித்தாள்.
அடுப்பில் சர்க்கரை பொங்கல் இருந்தது. அதை கிளற முடியாமல் தடுமாறினாள். ஹரியோ பொங்கலுக்கு தேவையான வெல்லத்தை உடைக்கலானான்.
”ஹரி” என ஈனஸ்வரத்தில் கத்தினாள் லஷ்மி. அவளை பார்த்தவன் வியந்தான்
”என்னாச்சி”
“என்னால இதை கிளற முடியலை கரண்டி உள்ள மாட்டிக்கிச்சி”
“மாட்டிக்கிச்சா அடிப்பாவி நல்லா கிளறும்மா அடிப்பிடிச்சிட போகுது”
”எனக்கு வரலை” என அவள் சொல்லவும் சின்னாவிடம் வெல்லத்தை தந்து உடைக்க சொல்லிவிட்டு எழுந்து அவளிடம் சென்றான்.
”கை எடு”
“முடியாது நானே செய்றேன்”
”உன்னாலதான் முடியலையே, இந்த பிடிவாதத்தை விடு தள்ளு” என சொல்லியும் அவள் முறைக்கவே தலையில் அடித்துக்கொண்டு எதிர்புறம் நின்றவன் அந்த கரண்டியை பிடித்து இழுத்து தூக்கிவிட்டு பின் உள்ளே விட்டு கிளற ஆரம்பித்தான். லஷ்மி கையை எடுக்காமல்