செய்தவன் லஷ்மிக்கு சொல்லியும் கொடுத்தான். அதையும் அவள் கவனமாக பார்த்துக் கொண்டாள்.
அடுத்து காஞ்சிபுரம் இட்லியையும் செய்தான் அதையும் கவனமாக பார்த்துக் கொண்டவள் அவனது தோள்களை பார்த்தாள். நன்றாக வேலை செய்து உரமேறியிருந்தது. அதை தொட்டு பார்த்தாள் அது கடினமாக இருக்கவும்
”என்னம்மா செய்யற” என கூச்சத்துடன் கேட்டான் ஹரி
”இல்லை நான் உன்னை செக்கப் பண்றேன்”
“எதுக்கு நான் நல்லாதானே இருக்கேன் எனக்கு உடம்புல ஒண்ணும் இல்லை”
”எனக்கு தெரியும் நீ இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்றதாலதான் உன் உடம்பு இப்படி கல்லு போலயிருக்கு”
”ம் பெரிய கண்டுபிடிப்பு நகரு என் வேலை முடிஞ்சிடுச்சி” என சொல்லிவிட்டு தாத்தாவிற்காக காத்திருந்தான். அவர் வரவும்
”தாத்தா எல்லாம் ரெடி நான் கிளம்பறேன்”
”சரிடா ஆனா ஜாக்கிரதை பத்திரம் வெளியாளுங்களை நம்பி ஏமாந்துடாத”
“சரி தாத்தா”
”சாப்பிட வந்துடு”
“ஆ வரேன்” என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் ஹரி
அவன் சென்றதும் லஷ்மி தாத்தாவிடம்
”தாத்தா அவர் எங்க போறாரு”
“வேலையை தேட போறான்மா”
”வேலையா எதுக்கு தாத்தா”
”வேலை வருமானம் இருந்தாதான் உன்னை கல்யாணம் பண்ணித்தருவேன்னு உங்கப்பா சொன்னாரு அதனால போறான்”
“வீட்லயே நிறைய வேலைகள் இருக்கறப்ப எதுக்காக அவரு வெளிய போகனும் தாத்தா”
“அதை செய்ய முதல் போடனும் பணம் தேவை, பணம் இல்லாம எதையும் செய்ய முடியாதும்மா கடன் வாங்கி செய்றதெல்லாம் சரியா வராதுன்னு சொல்லிட்டான். அவன் பாட்டி நகைகள் கொடுத்தப்பவும் வேணாம்னு சொல்லிட்டான்.”
”ஏன் தாத்தா அதான் இங்க துணிக்கடையிருக்கே அங்க வேலை செய்யலாமே”
“செய்யலாம் ஆனா பல வருஷங்களுக்கு முன்னாடி நான் பாகம் பிரிச்சிட்டேன் அந்த துணிக்கடை இப்ப வெங்கடேசனுக்கு சொந்தம் அவனோட பையன்களாலதான் அதுல உரிமை பாராட்ட முடியும்”