நன்மை பயக்கும் எனின்.
அதாவது குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம். அப்படி பொய் சொல்வதில் தப்பில்லை.
மாமா அத்தைக்கு நம்ம கதை தெரிந்தால் வருத்தப்படுவார்கள். வேதனை படுவார்கள்.. ஏன் அவர்கள் உடல் நலத்துக்கு கூட பாதிப்பு வரலாம். அப்படி வருத்தப்படாமல் இருப்பதற்காகத்தான்.
அது கூட இது ஒன்றும் பொய்யில்லை தான். என்ன ஒரு ரெண்டு மாசத்தை குறைத்து சொன்னேன்...” என்று கண் சிமிட்டி மலர்ந்து சிரித்தான்.
“சே...இப்படி யார் யாரோ தாங்கள் சொல்லும் பொய்யை நியாயப்படுத்த வள்ளுவரின் குரலை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
நீங்கள் எல்லாம் இந்த குரலை உதாரணமாக சொல்வீர்கள் என்று தெரிந்திருந்தால் வள்ளுவர் இந்த குரலை எழுதியிருக்கவே மாட்டார்...” என்று கழுத்தை நொடித்து மீண்டும் அவனை ஒரு ஏளன பார்வை பார்த்து முறைத்தாள்...
அதுவும் நீங்கள் என்பதை வேண்டும் என்றே அழுத்தி அவனை கேவலபடுத்தும் விதத்தில் இழுத்தாள். ஆனால் அவனோ அதற்கெல்லாம் அசரவில்லை...
“ஹா ஹா ஹா எப்படியோ அவர் எழுதி விட்டார் இல்லை. நாமளும் அதை ஃபாலோ பண்ணலாம். ஒன்னும் தப்பு இல்லை... “ என்று மீண்டுமாய் மலர்ந்து சிரித்தவன் தன் காரை ப்ரேக் இட்டு நிறுத்தி இருந்தான்.
இந்த முறையும் அவனுடன் வம்பு இழுத்துக் கொண்டு வந்ததில் கார் சென்ற இடத்தை கவனிக்க மறந்து விட்டாள். கார் அபர்ணா மகப்பேறு மருத்துவமனையில் நின்றிருந்தது.
உடனே யோசனையாக அவனைப் பார்க்க
“இன்னைக்கு செக்கப் இருக்கு பேபி... அப்பு உன்னை அழைத்து கொண்டு வர சொல்லியிருந்தாள். நேற்றே சொன்னேன் இல்லையா?” என்றவன் அவளை இறங்க சொல்லி சைகை செய்துவிட்டு அவனும் இறங்கி நடந்தான்...
“டேய் துஷ்.. இவங்கதான் உன் ஜூனியர்... உன் ஜூனியர் ம் உன்னை மாதிரியே ஒரு இடத்துல நிக்கவே மாட்டேங்கறாங்க ...நகர்ந்து கிட்டே இருக்காங்க பாரேன்... சரியான அறுந்த வாலா வருவாங்க போல “ என்று சிரித்தாள் அபர்ணா...
அவள் காட்டிய அந்த மானிட்டரில் தெரிந்த சின்ன உருவத்தை ஆசையாக பார்த்தான் துஷ்யந்த். அந்த நொடி அவன் உள்ளே ஒரு பாதர்ஹுட் பீலிங், தந்தையின் பூரிப்பு உடல் எல்லாம் பரவியது.