இங்கு சகானாவோ விஜயின் வாசிப்பில் அவளும் ஹனிகாவை போலவே உறங்கியிருந்தாள், அவளை யாரும் தொல்லை செய்யவில்லை, அவளே உறக்கம் கலைந்து மாலை நேரம் கண்விழித்து எழுந்துப் பார்க்க அவளுக்காகவே கோபமுடன் காத்திருந்தான் கௌதம். அவனின் கோபத்தைக் கண்டு
”என்னாச்சி” என கேட்க அவனோ பதில் சொல்லாமல் தாயிடம் சென்றான். அவன் சென்றதும் டீவியை பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த கதிரவனிடம்
”மாமா என்னாச்சி மாமா அவர் ஏன் கோபமா இருக்காரு“
”ஒண்ணுமில்லைம்மா நீ சாப்பிடாம தூங்கிட்டல்ல, அந்த கோபம் அவனுக்கு”
”ஓ அதுவா அண்ணா வாசிச்ச வாசிப்பு கேட்டு தன்னால தூக்கம் வந்துடுச்சி ஆமா அவராவது என்னை எழுப்பியிருக்கலாமே”
”அவன் எழுப்பினான், நீ எழலை அதனால அவனும் சாப்பிடலை, உனக்காக காத்திருந்தான்”
”ஓ சரி நான் போய் அவரைப் பார்க்கிறேன் மாமா“
”வேணாம்மா நீயிரு அவன்கிட்ட இப்ப போனா வீணா திட்டுவான்” என சொல்லும் போதே கௌதம் வந்தான் 2 சாப்பாட்டு தட்டுடன் ஒன்றை அவளிடம் தந்துவிட அவளோ
”சாரிங்க“ என்றாள்
”பரவாயில்லை மாமாவோட வாசிப்பு கேட்டு நீ இப்படி தூங்குவேன்னு நான் எதிர்ப்பார்க்கலை”
”சாரிங்க பொழுதுக்கும் டிவியையே பார்க்கறதால்ல டயர்டாயிட்டேன்”
”வேணும்னா நீ சாப்பிட்டு போய் தூங்கேன், எதுக்கு டிவியை பார்த்துக்கிட்டு, மாமாவை பார்க்க வேண்டியது அக்காதான் நீயில்லை”
”இருந்தாலும் அங்க நடக்கறதை பார்க்க ஆர்வமா இருக்குங்க”
”சரி சரி முதல்ல சாப்பிடு அப்புறம் பேசிக்கலாம்”
”இருங்க முகம் கழுவிவிட்டு வந்துடறேன்” என சொல்லியவள் சட்டென டிவியை பார்க்க அதைக் கண்டு கடுப்பான கௌதமோ
”அங்க ஒண்ணும் ஓடலை நிம்மதியா 2 பேரும் தூங்கறாங்க, நீ போய் முகம் கழுவிவிட்டு வந்து சாப்பிடு, உன்னால என் குழந்தை பட்டினியா கிடக்கனுமா” என சத்தம் போட்டு திட்ட அதில் சகானாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது, அதைக் கண்ட மற்ற அனைவருமே கௌதமை திட்ட அமுதாவே சகானாவை அழைத்துச் சென்றார்.
தான் செய்தது தவறு என புரிந்துக் கொண்ட கௌதமும் அவளை தேடி சென்று மன்னிப்புக் கேட்டான் அவளோ அவனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதோடு
”உங்கள போலதான் உங்க அக்காவும் எந்நேரமும் அண்ணாவை கஷ்டப்படுத்தியிருப்பாங்க,
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.