வைச்சிருந்தானுங்க, போதையில கிடந்தவனை காப்பாத்தனுமேன்னு என் பணத்தை கொடுத்து கடனை அடைச்சி அவனை எப்படியோ காப்பாத்தி வெளிய கூட்டிட்டு வந்தா என்கிட்டயே சிகரெட் கொடுன்னு கேட்கறான்மா, அப்படியே நான் ஷாக்காயிட்டேன் தெரியுமா
அடுத்த நாள் அவனை தேடிப் போனா பெரிய உத்தமன் ரேஞ்சுக்கு நடிச்சான், வீட்ல சொல்லாதீங்கன்னு என்கிட்ட கெஞ்சினான், என்னடா இவன் இப்படி கெஞ்சறானே சரிடா நான் யார்கிட்டயும் சொல்லலைன்னு அப்போதைக்கு சொல்லிட்டு ஒழுங்கா படின்னு சொன்னேன், அவனும் சரி சரின்னு தலையாட்டிட்டு அதே தப்பைதான் தொடர்ந்து செஞ்சான்.
அடுத்தமுறை அவனை கையும் களவுமா பிடிச்சேன், என்னடா இதெல்லாம்னு கேட்டா அவன் என்னையே மிரட்டினான். அந்தச் சமயம் ஜனனி எனக்கு வேணும்னு நான் பயந்து விட்டுட்டேன், அதான் நான் செஞ்ச பெரிய தப்பு காலம் போனா தன்னால அவன் மாறுவான்னு நம்பினேன் ஆனா இல்லை அடுத்து அவன் காலேஜ்க்கு படிக்கப் போனான் ரொம்ப நாள் கழிச்சி அவன் சம்பந்தமா ஒரு நாள் எனக்கு போன் வந்துச்சி பாப்பா, யார்ன்னு தெரியுமா போலீஸ் போன் பண்ணாங்க, என்ன ஏதுன்னு கேட்டா ஸ்டேஷனோட அட்ரஸ் சொல்லி உடனே வர சொன்னாங்க,
நானும் என்னவோ ஏதோன்னு போய் பார்த்தா அங்க லாக்கப்ல கௌதம் இருக்கான், அங்க இருக்கற போலீசை கேட்டா என்னையே திட்டிட்டாரு என்னாச்சின்னு பார்த்தா கௌதம் கஞ்சா வரைக்கும் போயிருக்கான், அதோட விடாம ஏதோ பார்ட்டி ஒண்ணு வைச்சி அதுல பெண்களை வரவழைச்சி ஒரே அமர்க்களம் பண்ணியிருக்கான், இவனோட இருந்தவனுங்க போலீஸ் வந்ததும் ஓடிட்டானுங்க, இவன் அடங்காம போலீசையே எதிர்த்து நின்னான் அவ்ளோதான் இவனை புடிச்சிட்டு வந்து இங்க விட்டாங்க, நான்தான் போலீஸ் கிட்ட கெஞ்சி பணத்தை கொடுத்து சரியாக்கி கேஸ் போடாம கௌதமை கூட்டிட்டு வந்தேன்.
இதுல என்ன கூத்துன்னா பார்ட்டிக்கு வந்த பொண்ணுகூட இவன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கான் போல, அந்தப் பொண்ணு அதை வீடியோ வேற எடுத்து வைச்சி பணம் கேட்டு ப்ளாக்மெயில் பண்ணவும் என்கிட்ட உதவி கேட்டான், சரின்னு ஜனனிக்காக அந்தப் பொண்ணை தேடிப் போக அதுல நான் போலீஸ்கிட்ட மாட்டி என்னை காப்பாத்திக்க நான் கார்த்திக்கை உதவி கேட்டு அவன் வந்து என்னை மீட்டெடுத்தான்
அடுத்து கௌதமையும் அந்த பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்த பணத்தை கொடுத்து சரிகட்டி அப்புறம் கௌதமை நல்லா திட்டிவிட்டுட்டேன், இதுக்கப்புறம் நீ சரியாகலைன்னா நான் ஜனனிகிட்ட சொல்லிடுவேன்னு சொல்ல அதோட அடங்கினான், அப்புறம் கொஞ்ச நாள் எந்த தகவலும் வரலை
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.