என சொல்லி தலையாட்ட அவளும் சரியென தலையாட்டினாள்.
அடுத்த போட்டோவை திருப்ப அதில் கௌதம் இருந்தான், அவனைக் கண்டதும் விஜய் நொந்துப் போனான்
”இவனா” என அலுப்பாக சொல்ல அதைக் கேட்ட ஜனனியின் வீட்டினரின் ஆர்வம் அதிகரித்தது அதிலும் கௌதமோ சட்டென டிவியை ஆப் செய்ய முயல மற்றவர்கள் அதைத் தடுத்தனர்
”ஏன்டா இப்படி செய்ற“
”வேணாம்கா மாமா என் மேல இருக்கற கோபத்தில எதையாவது தப்பா சொல்லிவைப்பாரு, அப்புறம் எனக்கும் மனக்கஷ்டம் வேணாம்கா“
”அவருக்கும் உனக்கும் என்ன பிரச்சனை, உன் மேல அவருக்கு என்ன கோபம் நீ ஏதாவது தப்பு செஞ்சியா”
”அக்கா நானாக்கா” என கேட்க அதில் அவளும் அமைதியாக கதிரவனும்
”அப்புறம் ஏன்டா நீ டிவியை ஆப் பண்ற பொறு மாப்பிள்ளை உன்னைப் பத்தி என்ன சொல்றார்ன்னு பார்க்கலாமே”
”இல்லைப்பா ஒண்ணும் வேணாம் நான் டீவியை ஆப் பண்றேன்” என சொல்ல அவனது நண்பர்கள் நால்வருமே சேர்ந்து அவனை அடக்கி ஒடுக்கி அமைதியாக அமரவைத்தார்கள்.
அதில் கௌதம் உள்ளுக்குள் சற்று கலங்கித்தான் போனான். அவனது கலக்கத்தை வெளிக்காட்டாமல் பார்த்துக் கொண்டான், ஆனாலும் அவன் கண்ணில் தெரிந்த மாற்றத்தை கதிரவன் குறிப்பெடுத்துக் கொண்டே சந்தேகத்துடன் டிவியை பார்த்தார்.
விஜயோ தன் மகளிடம் கௌதமின் போட்டோவை நன்றாக காட்டிவிட்டு
”ஹனிகுட்டி இவனை நல்லா பார்த்துக்க, உலகத்துல நீ யார்கூட வேணும்னாலும் பழகு ஆனா, இதோ இருக்கானே இவன்கூட மட்டும் பழகாத, அவன் முன்னாடி கூட போயிடாத, இவன் ரொம்ப டேன்ஜரானவன் சரியா” என சொல்ல அதைக் கேட்டு கௌதம் சற்று கலவரமானான்
ஆனாலும் தன்னை கெத்தாக வைத்துக் கொள்ள முயற்சிக்க ஜனனிக்கு குழப்பமே வந்து தன் தந்தையைப் பார்க்க அவரோ கண்களால் அமைதி என்பது போல் ஜாடை செய்ய அதில் அவளும் அமைதியானாள், சகானாவிற்கு தன் கணவனை பற்றி விஜய் என்ன சொல்லப் போகிறான் என தெரிந்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உண்டானது.
மறுபக்கம் விஜயோ கௌதமை பற்றி தாறுமாறாக திட்டிக் கொண்டிருந்தான்.
”இவன் பேருதான் கௌதம், சரியான பேட் பாய், எல்லா கெட்டப்பழக்கமும் இவன்கிட்ட இருக்கு, இவனை நீ எக்காரணம் கொண்டும் சேர்த்துக்காத, இவன் வந்தாலே வேறு பக்கம் போயிடு அதான் உனக்கு நல்லது, உங்கம்மாவோட தம்பின்னு உன்கிட்ட உரிமையா பேசிக்கிட்டு வருவான், ஆனாலும் நீ இவனை சேர்த்துக்காத உங்கம்மாவுக்காகவும் கூட
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.