அதனாலதானே அண்ணா சண்டை போட்டிருப்பாரு, அக்காவோட சண்டையை மனசுல வைச்சிக்கிட்டு அவங்களை பிரிக்க நினைக்காதீங்க, இது பாவம், அவங்க உயிருக்குயிரா காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, இப்பவும் அவங்களோட காதல் அப்படியேதான் இருக்கு, அண்ணா எதையுமே மறக்கலை, இதுல ஹனிகா வேற இருக்கா அண்ணாவை விடுங்க பாப்பாவுக்காகவாவது கொஞ்சம் உங்க முடிவை மாத்திக்குங்க ப்ளீஸ்” என கெஞ்சிவிட்டு சாப்பிட்டு முடித்து மீண்டும் டிவி முன் அமர்ந்துவிட கௌதமோ நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு ஹாலிற்கு வந்தான்.
அங்கு அனைவருமே கௌதமை முறைப்பதைக் கண்டு அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அமர்ந்துக் கொண்டான்.
அங்கு ஹனிகாவிற்கோ பசியின் உணர்வா அல்லது எதுவோ அவளே எழுந்ததோடு மட்டுமில்லாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் தகப்பனையும் தட்டி கிட்டி தடவி தள்ளி என எழுப்பிவிட அவனோ எழாமல் இருக்கவே ஹனிகா அப்படி இப்படி என பார்க்க அவன் பக்கத்தில்தான் கிடார் இருக்கவும் அதன் மீது தாவி ஏறி அமர்ந்து விஜய் வாசிப்பது போல தனது பிஞ்சு கரத்தால் அந்த கிடாரை வாசிக்க அது நாராஸமான ஒலியை வெளிவிட்டது, அந்த நாராஸமான இசையைக் கேட்டபடியே மெல்ல கண் விழித்தான் விஜய்
அவள் செய்வதைக் கண்டு மெச்சிக் கொண்டான்
”ஆஹா என் பொண்ணு இப்பவே என்னை மாதிரி கிடார் வாசிக்க ப்ராக்டீஸ் பண்றாளே, சூப்பர் இவளுக்கு நாமளே கிடார் வாசிக்க கத்துக் கொடுக்கலாம் என்னம்மா வாசிக்கறா இவள் பெரியாளானா பெரிய மியூசிக் டைரக்டரா வருவா எனக்கு நம்பிக்கை இருக்கு, என் அழகு தங்கம், என் ராசாத்தி வா வா என்கிட்ட வா” என அழைக்க அவள் உடனே கிடாரை விட்டு அவன் மீது தாவி ஏறிக் கொள்ள அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சவும் அவளுக்கும் பிடித்துப் போய் அதே போல அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவனது தாடி அவளை குத்த அவளோ அது பிடிக்காமல் வெறுப்பாக முகத்தை வைக்க அதைக் கண்ட விஜயோ
”என்னடா தாடி குத்துதா” என கேட்க அவளோ
”ம்மா” என முனக அவன் உடனே அவளை தூக்கிக் கொண்டு பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு ப்ரெஷாக வந்தார்கள் வெளியே. அடுத்து அவன் அவளை தூக்கிக் கொண்டு கிச்சனுக்குச் சென்றான், அவளுக்காக பால் காய்ச்சி புகட்டிவிட்டு அவனுக்காக பிரட் வெண்ணைய் தடவி சாப்பிட்டு முடித்து ஓரளவிற்கு பசியாறியதும் அவளை மீண்டும் தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
தனது அறையில் இருந்த பெட்டில் அவளை அமரவைத்துவிட்டு அங்கிருந்த பீரோவை
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.