“அதெல்லாம் என் பொண்டாட்டியை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று எனக்கு தெரியும் அத்தை. அவள் என்னிடம் எரிந்து விழுவது எல்லாம் சும்மா ஃபன் க்காக. வெளி வேஷம் தான். மற்றபடி நாங்க ரெண்டு பேரும் எங்கள் வாழ்க்கையை எப்பவோ தொடங்கி விட்டோம்... “ என்று எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எல்லாம் சேர்த்து தன் மாமியாரை சமாதானப்படுத்த முயன்றான்.
அதைக்கேட்ட வாணிக்கோ இன்னும் நம்ப முடியாதவராய்
“நீங்க பெரிய ஆளுதான் மாப்பிள்ளை. என் பொண்ணு முறுக்கி கொண்டு இருப்பதை பார்த்த பொழுது உங்களுடைய அறுபதாம் கல்யாணத்தில் தான் நீங்கள் ஒன்னு சேர வேண்டியதா இருக்கும் னு நெனச்சிருந்தேன்.
காலாகாலத்துல எங்க பேரப் புள்ளையை பார்க்க முடியாது என்ற வருத்தமும் இருந்தது தான். ஆனால் இப்ப விஷயத்தை கேட்கவும் ரொம்பவும் சந்தோசமா இருக்கு. ஐம் வெரி வெரி ஹேப்பி...கங்கிராட்ஸ் மாப்பிள்ளை. கை கொடுங்க. கலக்கிட்டீங்க... “ என்று தன் மருமகனின் கையை பிடித்து குலுக்கினாள் வாணி.
மணிபாரதிக்குமே துஷ்யந்த் சொல்லியதை நம்ப முடியவில்லை.
தன் செல்ல மகள், சிறுபிள்ளையாய் சுற்றி வருபவள் இப்பொழுது அவளே ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டிருப்பது தெரிய, இன்னுமாய் ஆச்சர்யமாகி போனார்.
தன் மனைவி கர்ப்பமாக இருந்ததை தெரிந்த பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட தன் மகள் தாயாகி நிற்பதை கேட்டதுமே பெரிதும் மகிழ்ந்து போனார்.
அருகில் வந்து துஷ்யந்தை கட்டி அணைத்துக் கொண்டவர்
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. இப்படி ஒரு நல்ல செய்தியை சொன்னதுக்கு. எனக்கு தாத்தா என்ற புரமோசன் கொடுத்ததற்கு...” என்று தழுதழுத்தவாறு அவனை கட்டியணைத்துக் கொண்டார்.
அதே நேரம் தன் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள் மணு.
அவள் எதிரில் நின்றிருந்த மூன்று பேரின் முகத்திலும் இருந்த மகிழ்ச்சியும் பூரிப்பையும் கண்டவளுக்கு மனம் சுணங்கியது.
“அடப்பாவிங்களா.. நான் ஒருத்தி மயக்கம் போட்டு கிடக்கிறேன். அதைப்பற்றி கவலைப் படாமல் மூன்று பேரும் என்னமா இழுச்சி கிட்டு நிக்கறாங்க... “ என்று முறைத்தவள் ம்கூம் என்று தொண்டையை செறுமி அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்க தன் மகளின் குரலை முதலில் கண்டு கொண்ட மணிபாரதி ஆர்வமாக திரும்பி கண்ணம்மா என்று அழைத்தவாறு வேகமாக எட்டி வைத்து அவள் அருகில் சென்றார்.
“என்னடா மணுக்கண்ணா.. என்கிட்ட கூட சொல்லாமல் மறைத்து விட்டாயே.. “என்றவாறு