என்னாச்சு அவளுக்கு? “ என்று படபடப்பாக பொரிந்து தள்ளினான்.
அதைக்கேட்ட அபர்ணா மீண்டும் வாய்விட்டு சிரித்தவள்
“டென்சன் ஆகாத டா எரும... அதெல்லாம் உன் ஜூனியர் படுத்துற பாடு டா. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். தாங்கிகிட்டு தான் ஆகணும்... “ என்றாள் சிரித்தவாறே.
அதைக் கேட்டதும் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான் துஷ்யந்த். ஆனாலும் மணுவின் கண்கள் சொருகிய நிலை கண் முன்னே வர மீண்டுமாய் அந்த வலியை அனுபவித்தவன்
“என்னடி சொல்ற? இப்படித்தான் வாமிட் வருமா? “ என்றான் இன்னுமே பதட்டத்துடன் கூடவே கொஞ்சமாய் வேதனையுடன்.
“ஹா ஹா ஹா பொதுவா மூன்றாவது மாதத்திலேயே இந்த மாதிரி ஆரம்பித்திருக்கும். உன் ஜூனியர் கொஞ்சம் லேட். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துட்டார் போல.
அதுதான் உன் பொண்டாட்டி சாப்பிட்டதை எல்லாம் பிடிக்கலைன்னு வெளியில் தள்ள வச்சுட்டாங்க. இனிமேல் அப்பப்ப இப்படித்தான் இருக்கும் நான் சொல்ற மாதிரி செய்யச் சொல்...” என்று சில அறிவுரைகளை வழங்கி கூடவே தொடர்ந்து வாமிட் பண்ணினால் சாப்பிடச் சொல்லி ஒரு மாத்திரையும் சொல்லி வைத்தாள்...
அதைக் கேட்டதும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக பதட்டத்துடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர் மணுவின் பெற்றோர்கள் இருவரும்.
அவன் பேசி முடித்ததும்
“என்ன ஆச்சு மாப்பிள்ளை? ஏன் பாப்பா மயக்கம் போட்டுட்டா? பயப்படும்படி ஒன்னும் இல்லையே..” என்று அவசரமாக பதற்றத்துடன் விசாரித்தார் மணி.
“அது ஒண்ணும் இல்ல மாமா. ப்ரெக்னன்சி டைம்ல அப்படித்தான் இருக்குமாம். என் பிரண்ட் அப்பு சென்னையிலேயே பேமஸ் ஹைனிக். அவ கிட்ட தான் இப்ப பேசினேன். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று சொன்னாள்... “ என்றான் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக.
ஆனால் அவர்களோ அவன் பேச்சை கேட்டதும் தெளிவாகாமல் இன்னும் குழம்பிப் போயினர்.
“ப்ரெக்னன்சியா? “ என்று வாணி வாய்விட்டு சந்தேகமாக குழப்பத்துடன் கேட்க அப்பொழுதுதான் துஷ்யந்திற்கு அவன் உளறி வைத்தது மண்டையில் உறைத்தது.
இதுவரை மணு கர்ப்பமாக இருப்பதை அவள் வீட்டில் சொல்லி இருக்கவில்லை. இப்பொழுது வாய் தவறி உளறியிருக்க, எப்படி சமாளிப்பது என்று அவசரமாய் யோசித்தான்.
அதே நேரம் மனதிற்குள் ஏதோ கணக்கிட்டு பார்த்தான். அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதம் முடிந்திருந்ததால் இப்பொழுது உண்மையை சொன்னால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவசரமாக முடிவு செய்தவன் உடனே லேசாக வெட்கப்பட்டு அவர்களை பொதுவாக