“இது சைனீஸ் ஸ்டைல் சிக்கன். யூடியூப்ல பார்த்து பண்ணினேன் மாப்பிள்ளை... “ என்றார் பெருமையாக...
“ம்கூம்... அது தான் வாயிலேயே வைக்க முடியல. இதெல்லாம் ஒரு சிக்கனா? உப்பும் இல்லை...உறைப்பும் இல்லை. என்னப்பா இது? இதை சாப்பிடத்தான் நான் இங்கே வந்தேனா? “ என்று தன் தந்தையிடம் முகத்தை திருப்பினாள் மணு.
திருமணமாகி மூன்று மாதம் கடந்தும் தன் அன்னையின் மீதான அவள் கோபம் இன்னும் தீரவில்லை. அதுவும் வாணி ஒன்றும் பெரிதாக செய்திருக்கவில்லை.
ஆரம்பத்தில் துஷ்யந்தை மணந்து கொள்ள சொன்னது மட்டுமே வாணி செய்த இமாலய தவறு... அவனுக்காக பரிந்து பேசியது பெரிய கொலை குத்தம் செய்துவிட்டதை போல இன்னுமே தன் கோபத்தை இழுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.
வாணிக்கு தன் மகளின் ஒதுக்கம் கொஞ்சம் வேதனையாக இருந்தது. ஆனாலும் சிறுபிள்ளையாக கோபம் கொண்டிருக்கும் தன் மகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். ஒரு நாள் தன்னை பற்றி புரிந்து கொள்வாள் என்று அவள் போக்கிலேயே விட்டு விட்டார் ...
இப்பொழுது அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்து வைத்திருந்த சமையலை குறை சொல்லவும் அதுவும் தன்னை நேராக பார்த்து சொல்லாமல் மறைமுகமாக தன் தந்தையிடம் முறையிட அதை கண்ட வாணிக்கோ முகம் வாடிப்போனது.
அதைக்கண்ட துஷ்யந்திற்கும் கஷ்டமாக இருந்தது.
“இவள் ஏன் இவங்களை இப்படி படுத்தறா?” என்று உள்ளுக்குள் அவளை திட்டியவன் தன்னை மறைத்துக் கொண்டு தன் மனைவியை நேராக பார்த்தவன்
“அப்படி பிடிக்காத சிக்கனைத் தான் முழுவதுமாக காலி பண்ணினாயா பேபி? உன் தட்டில் அத்தை வைத்தது ஒன்று கூட மீதி இல்லையே...” என்று குறும்பாக பார்த்து சிரித்தான்.
அப்பொழுதுதான் அவளுக்கும் அது உறைத்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் அன்னையின் சமையல் அதுவும் சிக்கன் என்றால் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அதிலேயே ரெண்டு மூணு வெரைட்டி செய்து வைத்திருக்க அவள் தட்டில் வைத்ததையெல்லாம் அவளையும் அறியாமலயே காலி பண்ணி இருந்தாள் மணு.
ஆனாலும் துஷ்யந்த் தன் அன்னையை புகழ்ந்து பேசுவது பிடிக்காமல் கூடவே வாணி அவனை விழுந்து விழுந்து உபசரிப்பது கண்டு கடுப்பானவள் எப்படியாவது தன் அன்னையை காயப்படுத்த வேண்டும் என்றுதான் அப்படி சொல்லி வைத்தாள்.
ஆனால் அதை சரியாக புரிந்து கொண்டு அவன் அவளை மடக்கி விடவும் பெண்ணுக்கும் முகம் கன்றி போனது. ஆனாலும் நொடியில் சமாளித்துக் கொண்டவள்