“ஹ்ம்ம்ம் தட்டில் வைத்த உணவை வீணாக்கக் கூடாது என்று என் அப்பா சொல்லி கொடுத்திருக்கிறார். அதனால் தான் வேற வழி இல்லாமல் எல்லாம் சாப்பிட வேண்டியதாகிவிட்டது... “ என்று முகத்தை திருப்பினாள்.
அதுவும் அப்பா என்பதை அழுத்தி சொன்னாள் வாணிக்கு உறைக்க வேண்டும் என்று.
“அப்படினா அத்தை... நீங்கள் சொன்ன அந்த சைனீஸ் சிக்கனை இன்னும் கொஞ்சம் எடுத்து வைங்க...என் பொண்டாட்டி அவள் அப்பாவுக்காகத்தான் சாப்பிடுகிறாள்... அவளுக்காக அல்ல... “ என்று சிரித்தபடி சொல்ல அதற்குள் வாணிக்கும் தன் மகளின் மணம் புரிந்து விட முகத்தில் இயல்பான புன்னகையோடு அந்த சிக்கனை எடுத்து மணு தட்டில் வைத்தாள்.
மணுவோ அவனைப் பார்த்து முறைத்தாலும் கை தானாக அந்த சிக்கனை எடுத்து வாய்க்கு கொண்டு சென்றது. அதேநேரம் திடீரென்று குமட்டிக் கொண்டு வந்தது.
எவ்வளவு தடுத்தும் முடியாமல் போக அவசரமாக எழுந்து அருகிலிருந்த வாஷ்பேசனுக்கு ஓடினாள். அடுத்த நொடி துஷ்யந்த் ம் தன் தட்டில் இருந்த கையை உதறிக் கொண்டு
“ஹே... பேபி... என்னாச்சும்மா? “ என்று பதட்டத்துடனும் முழுமொத்த கரிசனத்துடன் அவள் பின்னே ஓடினான்..
அதை கண்ட வாணிக்கும் மணிபாரதிக்கும் மனம் நிம்மதியாக இருந்தது. ஒருவரை ஒருவர் கண்ணால் ஜாடை காட்டி சைகை செய்து சிரித்துக் கொண்டனர்.
அதற்குள் வாஷ்பேசனில் அதுவரை சாப்பிட்ட உணவை எல்லாம் வெளியே தள்ளிக் கொண்டிருந்தாள் மணு. அவசரமாக தன் கையை கழுவிக்கொண்டு அவள் தலையின் இரு பக்கமும் அழுத்தி கெட்டியாக பிடித்துக் கொண்டான் துஷ்யந்த்.
அவளும் அவன் கையை தட்டி விட முயன்றாள். அவளை விடாமல் அழுத்தமாக பற்றிக்கொண்டான். ஓரளவிற்கு வயிற்றில் இருந்தது எல்லாம் வெளியில் தள்ளியவள் அடுத்த நொடி கால்கள் தள்ளாட அப்படியே துவண்டு அவன் மார்பில் சரிந்தாள்.
அவனும் பதட்டத்தோடு அவளை அப்படியே கையில் அள்ளிக்கொண்டு அருகிலிருந்த படுக்கை அறையில் கொண்டு சென்று அங்கிருந்த படுக்கையில் கிடத்தினான்.
அதை கண்ட வாணியும் மணிபாரதியும் பதறியடித்து அவன் பின்னே ஓடி வர துஷ்யந்த் அவசரமாக தன் மொபைலை எடுத்து அபர்ணாவிற்கு அழைத்திருந்தான். இங்கு நடந்ததை சொல்ல அபர்ணாவோ கூலாக
“ரிலாக்ஸ் டா எரும.. “ என்று பொருமையாக சொல்ல, அதை கண்டு டென்சன் ஆனவன்
“லூசாடி நீ... அவ பாட்டுக்கு அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். இதுல அடிவயிற்றில் இருந்து வாமிட் வேற. சாப்பிட்டது எல்லாம் அப்படியே வந்துடுச்சு. ஒழுங்கா சொல்லு.