செல்லமாக கோபித்து கொண்டார்.
அதைக் கேட்டு மணுவும் திடுக்கிட்டாள்..
“எதை மறைத்தேன்? எதற்காக அப்பா கோபித்துக் கொள்கிறார்?” என்று யோசித்தவள்
“நான் எதுவும் மறைக்கலையே பா... “ என்று யோசனையுடன் சொல்ல அதற்குள் முந்திக் கொண்ட துஷ்யந்த்
“நிகா... நீ கன்சீவா இருக்கிறது மாமா அத்தையிடம் சொல்லவில்லையா? நீ மயங்கி விழுந்ததும் அவர்கள் ரொம்பவுமே பதறி போயிட்டாங்க. அப்பொழுது தான் நான் விஷயத்தை சொன்னேன். இப்பொழுது உனக்கு மூன்று மாதம் என்று... “ என்று கண்ணால் ஜாடை காட்டி கண்சிமிட்டி புன்னகைத்தான் துஷ்யந்த்.
அதைக்கேட்ட மணுவுக்கு பலத்த அதிர்ச்சி...
“அடப்பாவி... முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதானோ ஐந்து மாத புள்ளையை மூன்று மாசம் என்று மறைத்து விட்டானே... அவர்களுக்கு சந்தேகம் வராதவாறு கணக்கிட்டு சொல்லியிருக்கிறான். பெரிய கேடி தான்... “ என்று உள்ளுக்குள் நக்கலாக சிரித்துக் கொண்டாள்.
அப்பொழுது இன்னொன்றும் உறைத்தது. துஷ்யந்த் அவளை நிகா என்று அழைத்தது.
“இது என்ன புது கதையா இருக்கு? இவன் எதுக்கு என்னை நிகா என்று அழைக்கிறான்? இது யாருடைய பெயர்? “ என்று அவசரமாய் யோசித்துப் பார்த்தாள்..
அப்பொழுதுதான் உறைத்தது. அவளுடைய பெயரின் இறுதி இரண்டு எழுத்துக்களை சேர்த்து சுருக்கி நிகா என்று அழைத்தான் என்று.
இதுவரை அலுவலகத்தில் அவனை சந்தித்த பொழுது மணிகர்ணிகா அதுவும் மிஸ் மணிகர்ணிகா என்று தான் முழு பெயரையும் இழுத்து சொல்லியிருக்கிறான்...
திருமணத்திற்கு பிறகு எப்பொழுதும் பேபி இல்லை என்றால் சில நேரம் டார்லிங் என்று அழைத்து வைத்தான். ஆனால் அவளுடைய பெயரை முழுவதுமாக சுருக்கியோ அழைத்ததில்லை.
அவள் மீது கோபம் கொண்ட சில தருணங்களில் மணிகர்ணிகா என்று இழுத்து அழைத்து உறுத்து விழித்து இருக்கிறான். ஆனால் இந்தமாதிரி நிகா என்றெல்லாம் அழைத்ததில்லை.
ஆனால் திடீரென்று எதற்கு இந்த ஓவர் நல்லவன் வேஷம் என்று யோசிக்க அடுத்த நொடி மீண்டும் புரிந்து போனது.
“இப்பொழுது மட்டும் என்னவாம்? எதற்காக இந்த பெயர்? அதுவும் அப்படியே என் மீது பாசமாக உருகி விடுகிற மாதிரி... “ என்று உள்ளுக்குள் பொரிந்து கொண்டிருக்க அந்த நேரம் தான் அவனுடைய இன்னொரு முகம் அவளுக்கு புரிந்தது