(Reading time: 6 - 12 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

முகத்தைச் சுளித்துக் கொண்டு சிரித்தவள், “ஆங்...இப்பக் கண்டுபிடிச்சிட்டேன்!... “சங்கொலி” பத்திரிக்கையில்....உங்க போட்டோவை அடிக்கடி பார்த்திருக்கேன்!...“ஜோதீஸ்வர்” என்கிற பெயரில்...கவிதை எழுதிட்டிருக்கீங்க” என்றாள் விழிகளை விரித்துக் கொண்டு.

“ஆஹா....என்னடா...இதுவரைக்கும் யாருமே கண்டுபிடிக்கலை”ன்னு நெனைச்சேன்!...நீங்க கண்டுபிடிச்சிட்டிங்க!...” என்று சன்னக் குரலில் சொல்லிய ரவீந்தர், “அது செரி...அந்த “சங்கொலி” பத்திரிக்கை ரொம்ப ரொம்பக் கடினமான ஒரு இலக்கியப் பத்திரிக்கை அதை நீங்க படிக்கறீங்களா?...ஆச்சரியமாயிருக்கு...உங்களைப் பார்த்தா மாடர்ன் கேர்ள் மாதிரி இருக்கீங்க...நீங்க எப்படி அந்தப் பத்திரிக்கையை?...”

“சார்...அதே சங்கொலி பத்திரிக்கைல “நாச்சியார்”ங்கற பெயரில் ஒரு பெண்ணோட கவிதை வந்திட்டிருக்கே?...படிச்சிருக்கீங்களா?”

“நல்லாவே படிச்சிருக்கேன்....மரபுக் கவிதை...புதுக்கவிதை இரண்டிலுமே பின்னியெடுப்பாங்களே?”

“ஹா...ஹா...ஹா”வென்று சிரித்த அந்த கோகிலா, “அந்த நாச்சியார் வேற யாருமிலை...சாட்சாத்...நானேதான்” என்று சன்னக் குரலில் சொன்னாள்.

புருவங்களை உயர்த்தி தன் வியப்பை வெளிப்படுத்திய ரவீந்தர், “ஹும்...இந்த நாட்டுல இலக்கியவாதிகள்...“நாங்கள் இலக்கியவாதிகள்” என்பது வெளியில் தெரிய வேண்டாம்! என்று ஒளிந்து கொண்டு எழுதுகிறார்களே?...அதுதான் வேதனையின் உச்சம்” என்றான்.

“என்ன பண்றது சார்?...இந்தச் சமுதாயம் ஒருவன் இலக்கிய ஆர்வலன், என்றாலே அவனை இளக்காரமாய்த்தானே பார்க்குது?...கவிதை எழுதறவனைப் பார்த்தால், “இதுல காசு வருமா?”ன்னு கேட்குது!...கதை எழுதறவனைப் பார்த்தால், “வேற பொழைப்பைப் பாருப்பா”ன்னு சொல்லுது!...அதிலும் ஒரு பெண் கவிதை எழுதுகிறாள் என்றால்...அவளை அசூசையுடன் பார்க்குது!...அதான்...அந்த மாதிரியான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டாம்னுதான் எல்லோரும் புனை பெயருக்குள் உட்கார்ந்து கொண்டு எழுதுகிறார்கள்!...” என்றாள் கோகிலா.

ரவீந்தர் மேலும், கீழும் தலையாட்டி அதை ஒப்புக் கொள்ள,

“அப்படியும் மீறி...நாம கவிதை...கதை...எழுதறது வெளிய தெரிஞ்சிட்டுதுன்னா....உடனே “நீங்க சினிமாவுல டிரை பண்ணலாமே?”ம்பாங்க!...என்னமோ..சினிமா உலகம் நம்மை “வாங்க...வாங்க”ன்னு வரவேற்றுக்கிட்டு...கதவைத் திறந்து வெச்சிருக்கற மாதிரி” என்றாள் அந்த நாச்சியார் என்கிற கோகிலா.

“அது செரி...என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சீங்க?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான் ரவீந்தர்.

“போன இஷ்யூல உங்களோட “நாணலாய் நாணுகிறேன்” கவிதையும் கூடவே உங்க

2 comments

  • Marketer ji what ji over karpanai brain kk not good ji :D swamiji kk unga brain help venumam ji 😉😉 parthu seiunga ji :yes: amam!! Nice update sir 👏👏👏👏👏 ivaru pora idhangalil ellam oru new cast introduce agurangale :Q: <br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.