(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

கிளாசோட கவனம் முழுக்க இங்கே திரும்பியதைக் கண்ட தேவி, நீ பண்ற வேலையால மொத்த வகுப்பும் வெளில பார்க்குது என்று திட்டினாள். வகுப்பின் இருபுறமும் ஜன்னல்கள் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்ட போதிலும். ஜன்னல் வழி வேடிக்கைப் பார்த்தே மாணவர்களின் கவனம் சிதறுவதாக ஆசிரியர்கள் புகாரை எழுப்பினர். மறுநாளில் இருந்தே, மாணவர்களுள் ஜன்னல் வழியே வெளியே பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக வகுப்பின் இருபுறமும் உள்ள வகுப்பறை ஜன்னல்களில் அடர்த்தியான ஊதா நிறத்தில் திரைகள் தொங்கவிடப்பட்டன.  தேவி ரம்யாவிடம், பார்த்தியா  ரம்யா, உன்னை மாதிரி பல பேரு பண்ணிருப்பாங்க போல, சைட் அடிக்கிறவங்கள ப்ளாக் பண்றதுக்கே ஸ்க்ரீன் போட்டாங்க மேனேஜ்மென்ட் என்று சொல்லிக் கிண்டலடித்தாள்.

வகுப்புகள், அசைன்மெண்ட்ஸ் என்று ஒரே மாதிரி சென்று கொண்டிருக்கையில், ஒரு உற்சாகமான அறிவிப்பு மாணவர்களுக்கு வந்தது. அந்த செய்தி, அவர்களின்  கல்லூரியில் தமிழ் மன்றம் உருவாக்கம் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு. பொதுவாக கலைக் கல்லூரிகளில் இது போன்ற மொழி சார் மன்றங்கள் இருக்கும். இன்ஜினியரிங் கல்லூரிகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதை முன்னெடுத்து சில ஆசிரியர்களும், தமிழார்வம் கொண்ட சில மாணவர்களும் மேற்கொண்ட முயற்சியில், அவர்களின் கல்லூரியில் தமிழ் மன்றம் தொடங்க கல்லூரி முதல்வர் சம்மதித்து விட்டார். ரம்யாவும் அந்த தமிழ் மன்ற விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தாள். ஆனால் கவிதை, பட்டிமன்றம் என எதிலும் பங்குபெற முயற்சி செய்யாமல், முதல் வருடம் என்பதால் பார்வையாளராக மட்டுமே இருப்போம் என்று நினைத்தாள். தினேஷுக்கு இம்மாதிரி கலை, இலக்கியம் சம்பந்தமான விழாக்களில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ரம்யா  உனக்காக இந்த தமிழ் மன்ற விழாவில் இருக்கிறேன்னு சொல்லி, எனக்குப் பிடிக்காத விஷயத்தை நான் இப்போ செஞ்சுட்டு, பின்னாடி செய்ய முடியாதுன்னு மறுத்து சொன்னால் உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்த மாதிரி விழா எதுவுமே நான் கலந்துக்க மாட்டேன். தப்பா நினைச்சுக்காத என்றவன் மாலையில் வகுப்புகள் முடியவும் தினேஷ் கிளம்பிவிட்டான். பிடிக்கும் பிடிக்காது என்பதில் எந்த சமரசமும் என்றி வெளிப்படையாக இருக்கும் தினேஷின் குணம் ரம்யாவை ரொம்பவே ஈர்த்தது. கல்லூரி நிறுவனர் தமிழ் மன்ற விழாவைக் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, மாணவர்களின் கவிதையரங்கம், பட்டிமன்றம், ஆடல், பாடல் என நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக இருக்க நேரம் சென்றதே தெரியவில்லை. பட்டிமன்ற அரங்கங்களில் புகழ் பெற்ற முனைவர் தமிழரசு சமகால திரைப்பாடல்களில் தமிழ் இலக்கணப் பெருமைகள் என்ற தலைப்பில் பேசினார், “கிளையை  முறித்துப் போட்டு விடலாம் வேரை என்ன செய்வாயோ?” இரண்டு வீட்டுக்கு நடுவில ஒரு மரம் இருக்கு, அது சுவரைத் தாண்டி வருதுன்னு வச்சுக்கோங்க,

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.