(Reading time: 10 - 20 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

கதை பேசி மகிழ்ந்தனர். சாயங்காலம் மகிழ்ச்சியுடன் சந்தியாவும் விடை பெற்று கிளம்பி விட்டாள்.

அன்று இரவு உணவை ஜனனி ஆயத்தம் செய்யத் தொடங்கினாள். ஜனா சாப்பிட வருவானா மாட்டானா என்பது தெரியாததால் இரண்டு பேருக்கு மட்டும் சமைக்க வேண்டுமா அல்லது அவனுக்கும் சமைக்க வேண்டுமா என்று புரியாததால் ஸ்வீனாக்கு அழைத்தாள்.

 ஸ்வீனாவின் அழைப்பு ஏற்கப்படவில்லை. ஸ்வீனா பிஸியாக இருக்கிறாள் போல... இப்பொழுது எப்படி தெரிந்து கொள்வது என்று யோசனையாக அமர்ந்திருந்த ஜனனியின் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள் தனு...

அம்மா...பயங்கர யோசனையா இருக்கீங்க போல, என்ன யோசனை சொல்லுங்க பார்க்கலாம் என்று ஜனனியின் கன்னத்தில் மெதுவாக தன் இதழை பதித்தாள் தனு.

அம்மா... அம்மா என்று அழைக்கும் குழந்தையின் அன்பில் மூழ்கி போய் இருந்தவளுக்கு பட்டுக் குட்டியின் அன்பு முத்தம் இன்னும் திணறடித்தது. மகிழ்ச்சியோடு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

அம்மாவின் பாசமான பரிசத்தை உணர்ந்தவள் இன்னும் இறுக்கமாக தாயை அனைத்து கொண்டாள். பெற்றால்தான் பிள்ளையோ?... மனதளவில் நேசிக்கும் ஒவ்வொரு உறவும் உண்மையான பந்தம் அல்லவா... இங்கும் அழகான ஆழமான தாய் சேய் உறவு மலர்ந்தது.

அம்மா... அப்பா நைட் வெளியே சாப்பிட மாட்டார்கள். அதனால் சேர்த்து செய்யுங்கள் என்ற தனுவின் கன்னத்தில் பதிலுக்கு முத்தம் கொடுத்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்க ம்மா... டேடிக்கு சப்பாத்தியும் குறுமாவும் ஃபேவரிட் என்றாள். மூவருக்கும் தேவையானதை சமைத்து விட்டு ஜனாவிற்காக காத்திருந்தனர்.

தனு இயல்பாக பேசிக் கொண்டே இருக்க ஜனனிக்கு அவன் சாப்பிடுவானா... அவனுக்கு பிடிக்குமா... என் பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. விருப்பப்பட்டு திருமணம் நடக்கவில்லை என்றாலும் விரும்பியவனே கணவனாக வந்து விட்ட அதிசயம் நிகழ்ந்து விட்டதே... அவனைப் பற்றி யோசித்து கொண்டே இருந்ததால் தனுவிற்கு சரியாக பதில் தர முடியாமல் தடுமாறினாள் சில வேளை.

புத்திசாலி குழந்தை ஆயிற்றே... உடனே புரிந்து கொண்டாள். நானே ஃபோன் போட்டு கேட்கிறேன் என்றவள் ஜனனியின் பதிலுக்கு காத்திராமல் ஜனாவிற்கு அழைத்து இருந்தாள்.

இரண்டொரு வார்த்தையில் பேசி முடித்தவள் அழைப்பை துண்டித்து விட்டு அம்மா ஐந்து நிமிடத்தில் வந்து விடுவார்கள் என்று சொல்லி வாசலுக்கு ஓடினாள்.

ஜனனிக்கும் அவள் பின்னே சென்று அவனை பார்க்க ஆசை தான். ஆனால் அவன் தன்னை தப்பாக புரிந்து கொண்டு இருப்பது தெரிந்தும் அவன் முன்னால் சென்று எப்படி நிற்பது என்று

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.