(Reading time: 9 - 17 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

        திடீரென்று ஹைவேயில் அவன் காரை நிறுத்த, இவள் பதறிக்கொண்டு அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவளை பார்த்துக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான்.

(அடப்பாவி கொழுப்பு கொழுப்பு உடம்பு ஃபுல்லா  கொழுப்பு. என்ன திரும்ப வக்கிறதுக்குதான் இந்த ஹைவேஸ்ல காரை நிறுத்துனியா!!!! இருந்தாலும் உனக்கு இவ்வளவு தைரியம் ஆகாதுடா..... என்னாச்சு சாருக்கு ரொம்ப சைலன்டா இருக்காரு. லுக் வேற மாதிரி இருக்கே. )

       அவள் அவனைப் பார்த்துக் கொண்டே இத்தனையும் மனதில் பேசிக்கொண்டிருந்தாள்.

     அவன் அவளைத் திரும்பிப் பார்க்காமலே என்ன சைட் அடிச்சது போதும். நாம இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு கெட் அவுட்.

      அவள் தலையில் அவளே மானசீகமாக கொட்டிக் கொண்டாள்.  இதுக்கு பேர் தான் கெத்தாடி அய்யோ..... அய்யோ ..... என்ன நினைச்சிருப்பான் என்ன பத்தி,

      அவள் காரை விட்டு இறங்கியதும் சிறு சிரிப்புடன் அவன் தலையை ஒரு புறமாக கோதி கொண்டான்.

       தன்னையே திட்டிக் கொண்டு நடந்தவள் எதிரே வந்த நவநாகரீக யுவதி மேல் மோதினாள்.

    ஏய் இடியட்..... கண்ண எங்க வச்சிருக்க..." யார் வராங்கனு கூட பாக்க மாட்டியா..... ஓ காட்... என்று அவள் பாட்டிற்கு திட்டிக் கொண்டே போக,

        தன் மீதுதான் தவறு என்று உணர்ந்தவள்.

   சாரி நான் பாக்கல.....

உன் சாரியை தூக்கி குப்பையில போடு இந்த மாறி ச்சீப் கேர்ள்ளெல்லாம் யார் உள்ள விட்டது செக்யூரிட்டி... செக்யூரிட்டி...

      தான் வந்து இறங்கியது ஒரு பெரிய பங்களா என்றும், தன்னை இங்கு ஏன் அழைத்துவந்தான் என்ற கேள்வியும் அப்பொழுதுதான்  அனிதாவிற்கு எழுந்தது. இவன் எங்க போய்ட்டான் என்று திரும்பிப் பார்க்க,

     ஆண் வர்க்கமே பொறாமைப்படும் ஆணழகனாய் அழுத்தமான நடையுடன் அவன் நடந்து வந்து கொண்டிருந்தான். எவ்வளவுதான் கட்டுப் படுத்தினாலும் அவனை விட்டு அவள் பார்வையை எடுக்க முடியவில்லை. அவள் அவனை விழுங்கும் பார்வை பார்த்த, அடுத்த நொடியே கோபம் பொங்கியது. ஏனென்றால் அந்த யுவதி அவனை இறுக்க கட்டிக் கொண்டாள்.

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.