(Reading time: 9 - 17 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

எங்களுக்கு எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் கிடைக்கும்னா.... நாம அக்ரிமெண்ட்  போட்டுக்கலாம் அங்கிள். ஆனா இந்த அஞ்சு வருஷத்திலே எந்த நட்டம் ஆனாலும் அதுக்கு நீங்க மட்டும் தான் பொறுப்பாவிங்க அங்கிள். இதுல பேப்பர்ஸ் இருக்கு படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுங்க... வேற எதுனா சொல்லறதுன்னா கூட சொல்லலாம் அங்கிள்.

    ஓகே கதிர் புரோடக்ட் சொன்ன டைம்-க்கு நாங்க அனுப்பி வச்சிருவோம். ஆனா டிரான்ஸ்போர்ட் ஜார்ஜ் நீங்கதான் போட்டுக்கணும்.  டீல் பேசும்போது கொடுக்கிற அமௌன்ட் ஃபைனல் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் நாங்க எதுவும் கேட்க மாட்டோம்.

   ஓகே அங்கிள் ஃபைன் இந்த அக்ரிமென்ட் சைன் பண்ணிடுங்க.

    புரோடக்ட் செக் பண்ணவே இல்ல கதிர்.

அவரைப் பார்த்து அட்டகாசமாக சிரித்தவன் அது பண்ணாமதான் நான் உங்க டீலிங்கு  ஒத்துக்கிட்டேன் நினைக்கிறீங்களா அங்கிள்.  அதுதான் ஃபஸ்ட் ஸ்டேஜ். அது ஓகே ஆனதுக்கு அப்புறம் தான் உங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்துச்சு அங்கிள்.

    பிரில்லியன்ட் மை பாய் என்று பாராட்டியவர். அக்கிரிமென்ட்டை படிக்க ஆரம்பித்துவிட்டார்.

     அவனுடைய அட்டகாசமான சிரிப்பை கண்டவள் அவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

   இப்பொழுது பார்வை எடுப்பாள் அப்பொழுது பார்வை எடுப்பாள் என்று எண்ணி அமைதியாக இருந்த கதிருக்கு, அவனே கூச்சப்படும் அளவிற்கு அவளது பார்வை இருந்தது. பொறுத்து பார்த்தவன் அவளின் புறம் சடாரென்று திரும்ப... அவள் பேந்தப் பேந்த விழித்தாள். என்ன என்று புருவம் உயர்த்தி அவன் கேட்க அதில் முகம் சிவந்தவள் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

       அவளுடைய சிவந்த முகத்தை பார்த்தவனின் உடலுக்குள் ஹார்மோன்களின் மாற்றங்கள் வெகுசிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

மீட்டிங் இனிதாக முடிய, அவன் மாமாவிடம் விடைபெற்றவன் நல்லவேளை  ஷர்மி வெளியே சென்று விட்டாள் என்பதை அறிந்தவன் ஹப்பா என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடியே விடைபெற்றான்.

      காரினுள் ஏறிய பின்னும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அவளுடைய சிவந்த முகம் அவன் உணர்வுகளை அசைத்து பார்த்தது என்றால், அவனுடைய இந்த நெருக்கம் அவளுக்கு மூச்சு முட்டியது.

இந்த நிமிடம்

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.