(Reading time: 9 - 17 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

    ஏய் அங்கேயே நிற்கிறதா உத்தேசமா டேக் ஃபைல் அண்ட் கம் இன்.

               எவ்வளவுதான் கட்டுப்படுத்தினால் சுத்தமாக முடியவில்லை. ஃபைலை எடுக்க காரினுள் சென்றவள். தன்னால் முடியும் வரை அழுது தீர்த்துவிட்டாள். ஐந்து நிமிடம் கழித்து தன்னை சரிபடுத்தி கொண்டவள். ஃபைலை  எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

      அதற்குள் அவனே வாசல்வரை வந்து விட்டான். ஃபைலை எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா என்று கோபமாக ஆரம்பித்தவன். அவளுடைய முகத்தை கண்டு அமைதியாக உள்ள வா என்று அழைத்தான்.

        அங்கு தொழிலதிபர் சீதாராமன்  அமர்ந்திருந்தார். அவருடைய மகள் தான் ஷர்மிளா. கதிர் அம்மாவின் தம்பி தான் சீதாராமன். அவருடன் டீலிங் பேசத் தான் இந்த மீட்டிங். அதற்குத்தான் அவருடைய வீட்டிலே முடித்துவிடலாம் என்று கதிர் வந்திருந்தான்.

       வாப்பா கதிர். இதுதான் உன் செக்ரட்ரியா என்று அனிதாவை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தார். பின்பு சரி வாங்க ஸ்டார்ட் பண்ணலாம்.

    கதிர் எங்க போயிட்ட நீ. பாரு உனக்காக நான் ஜூஸ் ரெடி பண்ணி கொண்டு வந்திருக்கேன் என்று அவனை உரசி நின்றவள். ஜீசை அவன் வாய்வரை சென்று ஊட்ட... தன் மாமா முன்பு இவள் செய்வதை தடுக்க முடியாதவன். நானே குடிச்சிக்கிறேன் ஷர்மி என்று நாசுக்காக ஜூஸை வாங்கி கொண்டான். அவன் பருகிக்கொண்டே அனிதாவை பார்க்க... அவள் தலை குனிந்திருந்தாள்.

அவனுக்கு பல்ப் இப்பதான் எரிஞ்சது. ஓ...... பொறாமையா என்று மனதிற்குள் சிரித்தவன்.

      ஒரு மடக்கில் ஜூஸை குடித்தவன். ஷர்மியிடம் கிளாஸை கொடுக்க..... அவள் அதை வாங்கிக் கொண்டு செல்லுகையில்,

அனிதா அருகில் சென்றவன்  அவளைத் தோளோடு அணைத்து மீட்டிங் அறை நோக்கி சென்றான். அங்கிருந்த சோபாவில் அவனுக்கு மிக அருகில் அமர வைத்துக் கொண்டான்.

     இதனை இரு கண்கள் கூர்மையாக நோக்கியது.

   அவனுடைய திடீர் செய்கையில் நிலைகுலைந்தவள். ஒரு வித கூச்சத்துடன் நெளிந்துகொண்டே அமர,

     பீ கம்ஃபர்டபுள் என்று அவள் காதிற்கு மிக அருகில் வந்து கூறினான்.

   அவனுடைய மூச்சுக்காற்றை உணர்ந்தவள் மூர்ச்சையாகிப் போனாள்.

  ம்க்கும்...... ம்க்கும்....என்று சீதாராமன் கனணக்க...

    அவர் புறம் திரும்பியவன் சொல்லுங்க அங்கிள். உங்க புரோடக்ட் அஞ்சு வருஷத்துக்கு

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.