(Reading time: 9 - 17 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

       சுறுசுறுவென்று கோபம் தலைக்கேற அவனை நோக்கி வேக எட்டுகள் போட்டவள். அருகே  வந்ததும் அவர்களிருவரின் பேச்சு அவளை கட்டிப் போட்டது.

      ஹாய் கதிர்....இப்பதான்  உனக்கு எங்க வீடு தெரிஞ்சதா... டாடி  கூப்பிடலனா நீ இப்போ  கூட வந்திருக்கமாட்ட.... என்று அவள் கிள்ளை மொழியில் கொஞ்சி பேச...

அதற்கு அவன் அப்படி இல்ல ஷர்மி வேலை பிஸி அதான்.

        அவள் பேச்சு எப்பொழுதும் போல் இப்பொழுதும்  அவனுக்கு எரிச்சலை உண்டாக்க... அவளை விலக்கி நிறுத்த எத்தனித்தவன். அப்பொழுதுதான் அருகில் நின்றிருந்த அனிதாவை பார்த்தான்.

      அவர்கள் இருவரையும் சுட்டெரிப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏன் இவ இப்புடி பார்க்குறா என்று அவன் யோசனையுடன் அவளை நோக்க,

      சார் எதுக்கு இங்க வந்துருக்கோம். அதிகார தொனியில் வெளிவந்தது வார்த்தைகள்,

      நீ தான் இவளை கூட்டி வந்தியா கதிர். இந்த மாறி ச்சீப்பான கேர்ள் கூட என்ன காண்டாக்ட்... ஷர்மி முகத்தை சுழித்து கேட்டாள்.

பல்லைக் கடித்தவன். ஷீ இஸ் மை செக்ரட்ரி.

ஓ....என்று அவளை நோக்கி ஏளனமாக பார்வையை வீசியவள். அவனை தொத்திக்கொண்டாள். இதனை பார்க்க பொறுக்காதவள்,

     சார் இங்க எதுக்கு வந்திருக்கோம்னு  கேட்டேன் என்று அதிகாரத் தொனியில் மீண்டும் கேட்டாள்.

      ஏற்கனவே ஷர்மி தந்த எரிச்சலில்  இருந்தவன். இவள் திமிராக கேள்வி கேட்க, பொங்கி விட்டான்.

  ஐயம் யுவர் எம்டி காட் இட் .

சோ வாட் மீட்டிங் சொல்லி இங்க எதுக்கு கூட்டி வந்திங்க தான் கேட்டேன் என்று மிடுக்காக அவள் கேட்டாள்.

    தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ். நான் சொல்றத செய்யதான் உன்ன செக்ரட்ரியா வச்சிருக்கே...

     ஷர்மி முன்பே அவளை அவன் கீழ்தரமாக பேச, ஷர்மி அவளை எகத்தாளமாக பார்த்தாள்.

    நீ ஏன் பேபி டென்ஷன் ஆகுற. வா நாம உள்ள போவோம் என்று அவனைத் தள்ளிக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

    அனிதா சிலையாக அவன் சென்ற பாதையை பார்த்துக் கொண்டிருக்க...

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.