(Reading time: 8 - 15 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

வீட்டை நோக்கி நடந்தாள். வாசல்படி வந்ததும் அனிதா வெட்க சிரிப்புடன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். அதனை அந்த இரு கண்கள் குறித்துக்கொண்டது.

அப்பொழுதுதான்  தன் அறையில் இருந்து வருவது போல் பாசாங்கு செய்தவன்.

வா சிட் என்று சோபாவை காட்ட.... அவளும் பவ்யமாக அமர்ந்துக்கொண்டாள்.

என்ன சாப்புட்ற ஹாட் ஆர் கோல்ட்....

இல்ல எதுவும் வேணா உங்க வேலை முடிஞ்சுருச்சுனா நா வீட்டுக்கு போறேன்.

ஹே சிட் சிட்.... வெயிட் ஹ மினிட் என்று அவன் கிச்சன் உள்ளே சென்றான்.

அவன் சென்றவுடன் என்ன எலி எதுக்கு ட்ரெஸ் இல்லாம சுத்திட்டு இருக்கு. இல்லையே இது சரி இல்லையே என்று அவள் ஆழ்ந்த யோசனையுடன் இருக்க....

என்ன பலமான யோசனையா என்று கூறிக்கொண்டே அவளை உரசிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தான். கையில் இருந்த இரு காபி கோப்பையில் ஒன்றினை அவளிடம் நீட்டினான்.

நடப்பதெல்லாம் கனவா.... நிஜமா.... என்று யோசனையூடே கப்பினை வாங்கினாள்.

முதலில் கதிர் குடித்து முடிக்க, அவள் முடிக்கும் வரை நியூஸ் பேப்பரை புரட்டினான்.

அவளும் கப்பினை டேபிள் மீது வைக்க,

அவள் புறம் திரும்பினான். ஐந்து நிமிடம் நீடித்தது அவனது பார்வை.....

அவளுக்கு பயமாகவும் இருந்தது அதே நேரம் சந்தோஷமாகவும் இருந்தது. ஏன்னா இவன் எந்த நேரத்துல என்னா செய்வானு சொல்ல முடியாதே!!!

அவளுக்கு மிக அருகில் வந்தவன் வலது கையை அவளுடைய வலது தோள்பட்டை மீது போட்டவன். அவளது இடது தோள்பட்டையில் முகத்தினை வைத்துக்கொண்டான். அவள் நெளிய... ஏய் அசையாத என்று அவள் இடது கையினை இவன் இடது கையால் இருக்கி பிடித்தான். அவன் பேசும் போது மீசை முடி அவள் கழுத்தை உரச... அவளால் சுத்தமாக முடியவில்லை.

நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ஹனி.... என்று அவன் கிறக்கமாக கூறினான்.

ம்ம் .... சொ.... சொல்லுங்க சார்..

நா இதுவரை எந்த பொண்ணு கிட்டயும் இப்புடி நடத்துக்கிட்டது இல்ல..... நீ தான் ஃபர்ஸ்ட்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க எஸ் நீ என்ன ரொம்பவே அட்ராக்டிவ் பண்ணிட்ட.... நா எதுல விழுந்தேன் உன்னோட இந்த நீளமுடி அழகுலயா.... இல்ல இந்த காந்த கண்லயா..... இல்ல தினமும் சித்ரவத பண்ற இந்த உதட்லயா என்று அவன் அதை வருட, அவள் முகம் நாணம் கொண்டு அவன் கையை தட்டி விட்டாள்.

இந்த ஃபேஸ் தான் என்ன பைத்தியம் புடிக்க வைக்குது. என்று அவன் முகத்திற்கு நேராக

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.