(Reading time: 8 - 15 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

அவளை திருப்பியவன் அவன் இரு கைகளால் அவளுடைய முகத்தை ஏந்தினான். நொடியும் தாமதிக்காது அவள் இதழ் தேனை உறிஞ்சினான். முதலில் அவன் செய்கையை உணர்ந்தவள் தன் முழு பலத்தையும் திரட்டி அவனை தள்ளினாள்.

அதில் சுயம் பெற்றவன் சாரி சாரி. நீ என் பக்கத்துல இருந்தா சொல்ல வந்ததையே மறந்து இப்புடி....

அவள் குனிந்து கொண்டாள்.

ஏய் ஓகே ஓகே சில்....

தன் தலையை அழுத்தமாக கோதியவன்.

பெருமூச்சொன்றை விட்டு தன்னை சமன் செய்தான்.

அவள் இரு கையையும் தன் இரு கையை கோர்த்தவன். ஹனி இங்க பாரு.....

அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

தன் ஒரு விரலால் அவள் முகத்தை நிமிர்த்தியவன்.

என்ன உனக்கு புடிச்சிருக்கா????

அவள் அதிர்ச்சியாக நோக்க....

சொல்லு என்ன புடிச்சிருக்கா....

அவள் ம்ம்.... என்று தலையாட்ட,

ம்ம் - னா ....

புடிச்சிருக்கு...

அவன் ஒரு வெற்றி சிரிப்புடன் அவளை நோக்கி எனக்கும் உன்ன புடிச்சிருக்கு....

இப்ப நம்ம லைஃப் பத்தி பேசுவோமா....

அவள் புரியாமல் அவனை நோக்க...

என்ன புரியலியா.....

ம்ம் ......

அந்த டேபிள்-ல உள்ள பேப்பர்ஸ் எடுத்துட்டு வா....

இவள் ஒன்றும் புரியாமல் அதனை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க.....

இது உன்னோடதுதான் பிரிச்சிப்பாரு.....

அவள் பேந்த பேந்த முழிக்க.....

என்ன முழிக்கிற பிரிச்சிப் பாரு.....

அவள் அதனை பிரித்து பார்க்க ....... அதில் நிறைய பத்திரங்கள் இருந்தது. அவள் குழப்பதுடன் அதை நன்கு பார்க்க.... அனைத்து பத்திரத்திலும் இவளது பெயரே இருந்தது.

அவனை நோக்கி இது என்னது என்று அவள் கேட்க....

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.