(Reading time: 9 - 18 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

“அவனை எப்படி அடையாளம் தெரிந்தது உனக்கு?”

அவள் முகம் சிவந்தது, தலையை குனிந்துக் கொண்டே "அவன் அப்படியே அவன் அப்பாவின் ஜாடையில் இருப்பதால்" என்றாள்.

" உனக்கு பரவாயில்லைன்னா, அவன் அப்பா பேரை சொல்றியா?," அவள் அதிர்ச்சியான பார்வையை பார்த்து " இப்போது சொல்லனும்னு இல்ல, நீ எப்ப வேனாலும் சொல்லலாம், சொல்லலேண்ணாலும் பரவாயில்ல."

“ஐயோ! அப்படில்லாம் இல்ல ஆன்டி........" அவன் பேரை சொன்னாள், அதைக் கேட்ட  அவர்கள் இருவரும் மயங்காத குறைதான்

ஜாஃபரும், நிக்கத்தும், ஒருவர் முகத்தை ஒருவர் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

" என்ன ஆச்சு ஆன்டி, ஏன் நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க?"

"ஒன்னுமில்லம்மா!" தன் முகத்தில் இருந்த கவலையை மறைத்தார் நிக்கத்

"அஜய் பிறந்த நாளன்னைக்கு உன்ன அவனுக்கு பாிசா அறிமுகப் படுத்தலாம்னு நினைக்கிறேன், உனக்கு ஒன்னும் ஆட்சேபமில்லயே?" என்றார் ஜாஃபா்.

“இன்ஃபாக்ட், எனக்கும் அவன் பரிசுதான்" என்றாள் பூடகமாக,  ஜாஃபரும், நிக்கத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அப்படின்னா, என்ன சொல்ல வர?"

"எனக்கும் நாளைக்கு தான் பிறந்த நாள்" எனறாள் வெட்கப் பட்டுக்கொண்டே.

" ஓ! அப்படியா? பிறந்த நாள் வாழ்த்துக்கள், அப்ப பொிசா கொண்டாடிடலாம்!" என்றார் நிக்கத்.

" ஐயோ, அதெல்லாம் வேண்டாம் ஆன்டி." என்றாள் வெட்கத்தோடு.

 

"எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே அங்கிள், அஜயோட டிரஸ் சைஸ் வேணும்."

"அதுக்கென்னம்மா நிக்கத் கூட வந்து ஹெல்ப் செய்வா, ஆனா ஒன்னு , அஜய்க்கு டிரஸ் வாங்கினா, மத்த குழந்தைகளுக்கும் வாங்கனும் இல்லன்னா அவன் நம்மட்டேயிருந்து ஒன்னும் வாங்க மாட்டான், அது மட்டுமில்ல, தங்க செயின் அது இதுன்னு எதுவும் வாங்கிடாதே, பயல் வாங்கவே மாட்டான், ரொம்ப அருமையான பையன் மா."

அவள் கண்கள் கரித்தது ஆனால் சமாளித்துக் கொண்டாள்.

“சாி அங்கிள், நான் கிளம்பறேன் ஆன்டி நாம நாளைக்கு கடைக்கு போக லாமா?"

"நாளைக்கு போக லாம் தனம், நீ எனக்கு ஒரு மக தாம்மா, நீ என் மகதானே, ஒத்துக்குறியா?",

"ஒத்துக்கறன் ஆன்டி"

“சாி அப்ப எங்க காா்லயே உன் வீட்ல நான்  உன்ன கொண்டு விடறேன் சாியா?"

8 comments

  • Thanks for your comments. Please continue to read my upcoming episodes and keep supporting me. <br /><br />VJG
  • Thanks MS. Bhanu. Your valuable comment is encouraging...please continue to read my upcoming episodes and support me.<br /><br />VJG.
  • Dear VJG! Good afternoon! கதை ரொம்ப சுவையா போகுது, கரு மிக சிக்கலானது! அதை கவனமுடன் கையாளுகிறீர்கள். தவிர, மத நல்லிணக்கத்தையும் சேர்த்து சூப்பரா படைச்சிருக்கீங்க! வளர்க, உம் திறமை!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.