கும்பகோணம்
தரணிதரனுக்கும் பரணிதரனுக்கும் தாங்கள் பிறந்த ஊரிலேயே பெண் பார்க்காமல் அதிலும் சொந்தங்களில் பெண்ணை தேடாமல் அசலூரில் பெண் எடுக்கலாம் என்ற எண்ணம் கனகலட்சுமிக்குதான் முதலில் தோன்றியது.
அதற்காகவே கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த தாமரைசெல்வியை பரணிதரனுக்கு பேசி முடித்தார்கள். இதைபற்றி தஞ்சையில் யாருக்கும் தெரியாது, ரகசியமாக வைக்கும் எண்ணம் என்றில்லை ஆனாலும் நிச்சயம் வரை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்தார்கள்
காரணம் கலெக்டருக்கு படிக்கும் பரணிக்கு ஏகத்துக்கும் பெண் வீட்டைச் சார்ந்தவர்கள் லைனில் நின்றார்கள், சொந்தங்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஊர் பெரியவர்களின் குடும்பங்கள், பணக்காரர்கள் என்று அவர்களில் ஒரு வீட்டுப் பெண்ணை எடுத்தால் மற்றவர்களுக்கு வெறுப்பும் கோபமும் வருமென்று கருதியே கனகலட்சுமி வெளியூரில் பெண் எடுக்க முடிவெடுத்தார்.
அதிலும் தரணி பரணி இருவரும் இரட்டையர்கள், யாருக்கு முதலில் பெண் பார்த்து திருமணம் செய்வது என்பது ஆரம்பத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் கவலையாக உருவெடுத்தது. பரணிக்கு என்றால் கலெக்டராவான் என்ற காரணத்தில் பெண்கள் வரன்கள் குவியும் ஆனால் விவசாயியான தரணிக்கு வரன்கள் வருமா என்பதே கேள்விக்குறிதான். அப்படியே வந்தாலும் சொத்துபத்திற்காக வரும்
காரணம் தரணியை பற்றி அந்த ஊரே அறியும், சேட்டைக்காரன், வாய் கொழுப்பு அதிகம், பரணியை போன்று டீசன்டாக இருக்க மாட்டான், பரணி பேன்ட் சட்டை அணிந்து டிப்டாப்பாக இருந்தால் தரணியோ வேட்டி சட்டை அணிந்துக் கொண்டு அந்த வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு ஊரில் கெத்தாக உலா வருவான், பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் கலாய்ப்பான், இதனாலேயே அவ்வூரில் இருப்பவர்களுக்கு பரணி மீது தனி அன்பும் மதிப்பும் உண்டு, ஆனால் தரணி மீது வெறுப்பும் கோபமும் உண்டு, அந்தளவிற்கு ஊர்க்காரங்களை ஏய்ப்பதில் சூரப்புலியானான் தரணி.
அதிலும் அண்ணன் தம்பி உறவு முறை வைக்காமலே அவர்களை வளர்த்த காரணத்தால் பெரிதாக அவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்ற உறவுமுறையில் கட்டுப்படாமல் நண்பர்களைப் போல வளர்ந்தனர்.
ஆனாலும் தரணியின் முரட்டுசுபாவம் சேட்டை அதிலும் அவன் பரணியை வாடா போடா என அழைப்பது அவனை ஏய்ப்பது இதை எல்லாம் வைத்து அவ்வூர்க்காரர்கள் தரணிதான் மூத்தவன் என்றும் பரணிதான் இளையவன் என்றும் எண்ணிக் கொண்டு அவ்வாறே பேசி