தஞ்சை
பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக தனது தோழி கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றாள். தமிழைக் கண்டதும் கீர்த்தியோ ஆச்சர்யப்பட்டாள்
”என்ன தமிழு இங்க வந்திருக்க”
”உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றாள் சிரிப்புடன்
”என்னையா நேத்துவரைக்கும் நான் உன்கூடதானே இருந்தேன்”
”என்னவோ பார்க்கனும்னு தோணிச்சி, வந்தேன் ஆமா எப்படியிருக்க கீர்த்தி” என வெகுளியாக கேட்டு வைக்க கீர்த்தியோ தலையில் அடித்துக் கொண்டு
”நேத்துதானே பார்த்துக்கிட்டோம் இன்னிக்கு காலையிலக்குள்ள என்ன நடந்துடப்போகுது”
”சொல்டி” என்றாள் பதட்டமாக அவளின் பதட்டமான முகத்தைக்கண்டு
”என்னாச்சி தமிழு ஏதாவது பிரச்சனையா” என கீர்த்தி கேட்க உடனே அவளிடம் தன் வீட்டில் சொன்னவற்றை சொல்லி புலம்பி தீர்த்தாள் அவள் சொன்னதை சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தியும் தோழியுடன் சேர்ந்து வருந்தினாள்
”இது அநியாயம், என்கிட்ட கூட உன் அக்காவுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை எப்படியிருக்கனும்னு சொல்லியிருக்க, ஆனா பாரு, உங்க வீட்ல இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே, அதெப்படி அக்காவுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளையை பார்க்காம அவங்களுக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பார்க்கலாமா, அவங்களா வாழப்போறாங்க அக்காதானே வாழப்போறாங்க, அவங்களை பத்தி யோசிக்கவேயில்லையே இவங்க” என காட்டமாகச் சொல்ல அதற்கு தமிழும்
”ஆமாம்டி இதான் என் கவலையே” என வருந்த
”ப்ச் இதுல கவலைப்பட என்ன இருக்கு பேசாம நிச்சயத்தை நிறுத்த சொல்லிடு“
”சொன்னேன் யாரும் கேட்கலை அதான் இங்க வந்தேன்”
”இங்கயா“
”ஆமாம்”
”இங்க வந்தா பிரச்சனை எப்படி சரியாகும் தமிழு”
”ஆகுமே, நான் மாப்பிள்ளையை பார்க்கனும் கீர்த்தி, அக்கா சொல்றா படிப்பு உயரம் நிறம் எல்லாம் முக்கியம் இல்லை குணம்தான் முக்கியம்னு”
”குணமும் தேவைதான் ஆனாலும்” என இழுக்க
”அதே தான் கீர்த்தி, அக்கா வரப்போறவரோட குணத்தை பார்த்து சம்மதம் சொன்ன மாதிரி