ஞாபகத்துக்கு வரும்போது, என் சாய்ராவே பொறந்துட்டா, ஐயோ தனத்துக்கு பெரிய துரோகம் செய்ஞ்சுட்டேனேன்னு ரொம்ப கதறினேன், ஆனால் என்ன பிரயோசனம், என்னென்னவோ முடிஞ்சுடுத்து, இப்பதான் மனசு கொஞ்சம் லேசாச்சு, அதனாலதான் இந்த நிக்காவ இன்னிக்கே முடிக்கனும்னேன், நம்ம அஜய் லீகல் மகனா இருக்கணும்னு தான் உன்கிட்ட இன்னிக்கின்னு பிடிவாதம் பிடிச்சேன் இல்லேன்னா இந்த குற்ற உணர்ச்சியிலேயே சீக்கிரமே இறந்திருப்பேன்."
"ஸாரி ஆதூ, உன் மனச ரொம்ப காய படுத்திட்டேன், சாரிடா!"
அவன் தன் கையை விரித்தான், "வா, இங்க வா!"
" ஆதூ, வி ஆர் நாட் டீனேஜர்ஸ் கீழ நம்ம பெத்தவங்க, பசங்க எல்லாருமே இருக்காங்க, இங்க நாம தனியா, ப்ளீஸ் வேணாம் வா கீழ போகலாம். "
"ஏய், நீ என்ன, நமக்கு இன்னிக்குதான் நிக்கா ஆயிருக்கு, அதுக்குள்ளே என்னவோ அறுபது வயசு ஆனா மாதிரி ஆக்ட் பண்ற?"
"வாடா, நான் ஒன்னும் பண்ண போறதில்ல, சும்மா வா தனம்மா!"
அவள் கிட்டே நெருங்கினாள், ஆனால் அவனை ஏமாற்றி விட்டு கீழே இறங்கி ஓடினாள் சிரித்துக் கொண்டே.
அந்தப் பக்கமாக வந்த அஜய் அதை பார்த்துவிட்டான் தன் அம்மாவா இது சின்ன பெண் போல சிரித்துக் கொண்டே ஓடி வருகிறாள், ஏதோ நடந்திருக்கு என்று புன்னகைத்து கொண்டு வேறு வழியாக போய் விட்டான்.
சிறிது நேரம் இம்ரானுடனும், சாய்ராவிடமும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டும், சாய்ராவிடம் விளையாடிக் கொண்டும் இருந்தான் அஜய்.
நிக்கத்தும், லக்ஷ்மியும் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது தான் நிக்கத்திடம், லட்சுமி கேட்டார் "என்ன செய்ய போறீங்க, இன்னிக்கே சாந்தி முஹூர்த்தம் வைக்க போறீங்களா?"
"சாந்தி முஹூர்த்தமா என்ன சொல்றீங்க?"
"அதாங்க முத ராத்திரி?"
"ஓ, நிக்கா பண்ணி வைக்கறது வரை நம்ம பொறுப்பு, பிறகு மத்ததெல்லாம் அவங்களே முடிவு செய்யட்டும் தனம்மா, அவங்க சின்ன பசங்க இல்ல, அதனால அவங்களே முடிவு செய்யட்டும்."
"அதான ஆண்ட்டி, அவங்க என்ன முதல் முறையா கல்யாணம் செய்ஞ்சுட்டாலும், அவங்கதான் கல்யாணத்துக்கு முன்னேயே குழந்தை பெத்துட்டாங்களேம்மா இதுல என்னம்மா