(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 08 - விஜேஜி

று மாதம் ஆகிவிட்டது ரெக்கார்டிங் தியேட்டர் வந்து.  பிறகு, தனம் ரெக்கார்டிங்க்கு சென்றாள், இரண்டு பாட்டு ஒன்று அஜயோடு, அஜய்க்கு அன்னிக்கு காலேஜுக்கு போயே ஆகவேண்டிய கட்டாயம் , அதனால் கொஞ்சம் முன்னாடியே ரெக்கார்டிங் வைத்துக் கொண்டார் ஜாபர்.  இருவரும் காலையில் சீக்கிரம் எழுந்து ஒன்றாகவே வந்தார்கள், வந்தவர்களுடனேயே டிபன் சாப்பிட எல்லாம் வீட்டிலிருந்தே வரவழைத்தார் ஜாஃபர், "அஜய், தனம் இரண்டு பேரும்

ஒன்னும் சாப்பிடல இல்லையா? நானும் உங்களோட சாப்பிட வெயிட் பன்றேன். "

"இல்ல மாஸ்டர், நானும் உங்களோட சாப்பிடலாம்னு தான் வந்தேன், அம்மாவும்தான் நம்மகூட சாப்பிட போறாங்க!"

"நானும் அதான் சொல்ல வந்தேன், தனம்மா நம்ம கூட சாப்பிடும்மா!"

"ஓகே அங்கிள்!"

அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. எப்பவும் அஜயும் ஜாஃபரும் பேசும்போது அவர்களுக்குள் ஒரு அன்னியோன்னியம் இருக்கும். ஜாஃபர் சின்ன பையன் மாதிரியே ஆயிடுவார், சினிமா, பாலிடிக்ஸ் ஸ்போர்ட்ஸ் என்று பலவகையான விஷயங்களை ஆராய்வார் ரொம்ப லைவ்லியாக இருக்கும். அவர்களுடைய அந்த பாண்டிங்கை பார்க்க தனத்திற்கு ரொம்ப பிடிக்கும், அதனாலேயே இன்னிக்கு அவர்களுடன் சாப்பிட வந்தாள்.

அவர்கள் மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள், "மாஸ்டர், இன்னிக்கு எனக்கு ஒரு ப்ராஜக்ட் பிரெசென்ட் பண்ணனும், அதனால சீக்கிரமே போகணும் மாஸ்டர், அதனால நோ மொக்கை டுடே! " என்று அவரை பார்த்து நக்கலாக சிரித்தான்.

"சோ நம்ம டாக்டர் சார், இந்த ஜாஃபரை பார்த்து மொக்கை போடறேண்டார். சரி சரி இந்த மொக்கையை நெக்ஸ்ட் மீட்டிங்கில் வச்சுக்கலாம், இப்ப சாப்பிடு! "

"சாரி மாஸ்டர், இன்னிக்கு பிரெசென்ட்டேஷன் மூட்ல இருக்கேன்.... சும்மா நீங்க மொக்கைன்னு உங்களை கலாய்ச்சேன், ஐ அம் ரியல்லி சாரி மாஸ்டர்!"

"போடா தங்கம், எனக்கு இதுதாண்டா வேணும்,நீ இப்படி பேசறது, என்னை கலாய்க்கறது, இதுதாண்டா வேணும். பார் எனக்கும் இந்த மாதிரியே பாஷை வந்துடுத்து.... ஆமா நீ எப்போலேர்ந்து இந்த பாஷையெல்லாம் பேச ஆரம்பிச்ச?"

"அது மாஸ்டர், ஸ்கூல்ல எல்லா பசங்களும், கர்ல்ஸ் கூட இப்படித்தான் பேசறாங்க, அதை கேட்டு கேட்டு எனக்கும் அப்படியே வருது."

, இன்னும் இப்படி பேசினா எப்படி இருக்கும்னு தோணித்து, சரி உங்க கிட்ட கொஞ்சம் பேசச்ச உபயோகிக்கலாம்னு தோணித்து அதான்....."

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.