(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"இல்லமா, கொஞ்சம் யோசிச்சு பாரு ஒரு பையன் என் மகன் ஜாடையில் அச்சு அசல் இருக்கும் போது அது யார் என்னன்னு யோசிக்காம தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா என்ன? அதனால எப்படியோ தெரிஞ்சுண்டேன்."

"அப்போ ஏன் அங்கிள் என்கிட்ட சொல்லல?"

"ஏன்னா நீயும் உன் மகனோட அப்பா யாருன்னு பேரை சொல்லல, இவனும் என் கிட்ட ஒன்னும் சொல்லல அதனால தான் நானும் எதுவும் காட்டிக்கல, இது வரையில் கண்பார்மா எனக்கு தெரியல, இப்போ சொன்னவுடன் எனக்கு புரிஞ்சுது ."

"சாரி அங்கிள் உங்ககிட்ட நான் சொல்லாததுக்கு." என்று மன்னிப்பு கேட்டாள் தனம்.

 

"நான் தான் சொல்லியிருக்கேன் இல்ல நீ என் மகள்ன்னு , என் கிட்ட எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு. "

"வாப்பா, உங்களுக்கு எல்லாம் தெரியும், நான் தனம் கூட அஜய்ய பார்க்க போறேன்பா " என்று தலை குனிந்துகொண்டே கேட்டான், அப்துல்.

அவனை இழுத்து உச்சி முகர்ந்து, "என்னடா இதெல்லாம் என்கிட்ட கேட்கணுமா போயிட்டுவா! " என்றார் ஜாஃபர் .

இருவரும் கிளம்பி, தனம் ஏற்கனவே அஜய்க்கு சொல்லியிருந்த ரெஸ்டாரண்டுக்கு சென்றார்கள். அது ஒரு சைவ ஹோட்டல்.

அப்துல் கார் ஓட்டும்போது இரண்டு பேரும் ஒன்றும் பேசவேயில்லை, ரெஸ்டாரண்ட் வாசலில் அவளை இறக்கிவிட்டு அவன் பார்க்கிங்க்கு போக போனான் அப்போது ஒரு ஆள் வந்து “சார் கார் கொடுங்க, நீங்க ரெஸ்டாரண்டுக்கு தானே வந்திருக்கீங்க, நாங்க காரை காராஜில் விட்டுட்டு, நாங்க அப்புறம் கொண்டுவந்து தருவோம் சார்!" என்றான்.

"ஓஹ் வாலே வா? சரி இந்தாங்க சாவி "என்று கார் சாவியை அவனிடம் கொடுத்தான் .

"அவனும் தனமும் உள்ளே சென்றார்கள், அப்போது தனம் அஜய்க்கு போன் செய்தாள்,அவன் போனை எடுத்தவுடன் " நீ எங்கேயிருக்கே அஜய்?"

"உள்ளேதான் இருக்கேன்மா, உள்ள வா!" என்றான் மகன்.

இருவரும் உள்ளே சென்றார்கள், அங்கே அஜய் அம்மாவைத்தான் முதலில் பார்த்தான், அப்துல் பின் தங்கியே சென்றான்.

அஜய் எழுந்து நின்று , இருகரமும் நீட்டி தன் அம்மாவை வரவேற்றான் " ஹே மா, இன்னும் யாரோ வராங்கன்னு சொன்னியே எங்கே?" அவள் திரும்பி பார்த்தாள், அப்துல் பின் தங்கியே மெதுவாக வந்துக் கொண்டிருந்தான்.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.