(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"ஹேய் என்ன நீ! நீ மட்டுமா இந்த தப்பு பண்ண, நானும்கூட தப்பு செய்ஞ்சிருக்கேன் ஆதூ, நீ என் கால்ல விழவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்ல ஆதூ. பொறுப்பில்லாமன்னு சொன்னியே , அந்த வயசுல பொறுப்பை எல்லாம் எப்படி எதிர் பார்க்க முடியும் சொல்லு, என்ன ஏதேதோ நடந்து, அதை உன்னோட பகிர்ந்துக்க முடியல அதுதான் வருத்தம், இன்னொன்னு எனக்கே இதெல்லாம் கால்லேஜுக்கு  போனவுடன்தான் புரிந்தது, இதை எப்படியும் உன்கிட்ட சொல்லணும் எப்படி உன் அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்கறதுன்னு, அதான் கொஞ்சம்...."

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ஆதூ, " என்று அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் தனம் .

அவளை மென்மையாக அணைத்தான்,"எனக்கு இத்தனை நாளாய் எதையோ என் வாழ்க்கையில் மிஸ் செய்த மாதிரி பீலிங் இருக்கும், இப்போ உன்னை பார்த்தவுடன் ஒரு நிம்மதி வருது என் மனசுக்கு, அது ஏன்னு இப்பதான் புரியுது." என்றான், அவளிடம் மென்மையாக.

"ஆதூ, உன் மனைவி....."

"ஷ்ஷ் ... இப்போ நீயும் நானும் மட்டும்தான், யாரை பத்தியும் பேசாத!"

"சரி, என்ன விடு, எப்போவேணா உங்க அப்பா வந்துடுவார்."

"வந்துடுவாரில்ல... மறந்து போயிட்டேன், சரி நீ சொல்லு, இங்க எப்படி வந்த? எப்போ வந்த? ஏன் என்கிட்ட சொல்லல? நீ சொல்லு எங்க வாப்பாகிட்ட அவ்வளவு க்ளோசா இருக்க, என்ன ஏன் காண்டாக்ட் பண்ணல?"

"இரு இரு பொறுமையா ஒவ்வொரு கேள்வியா கேளு?"

நான் பெரிய கதையாக சொல்லணும், அதை அப்புறம் சொல்றேன், சரி உன்ன பத்தி சொல்லு?" என்று அவனிடம் கேட்டாள்.

"என்ன பத்தி சொல்ல என்ன இருக்கு ஒண்ணுமில்ல? "

"ஒன்னுமில்ல?"

" ம்ம் ... ஒன்னுமில்ல!"

"அப்போ உன் மனைவி, பிள்ளைகள்?"

"ஐ அம் சாரி! உன்னை விட்டு நான் நிக்கா பண்ணிட்டேன், அதுவும் எங்க அம்மீ தான் கம்பெல் பண்ணாங்க, சாரி. எனக்கு தோனியிருக்கணும், ஆனா அது எப்படியோ என் நினைவுலையே இல்ல தனம், இருந்திருந்தா கண்டிப்பா உன்ன வந்து பார்த்திருப்பேன். "

"எனக்கு உன்ன தெரியும் ஆதூ, அது சின்ன வயசு, அறியாத வயசு, அதுக்காக நாம பண்ணது

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.