(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"சரிடா தங்கம்,நீ என்னவேன்னா பேசு.. நோ பிராப்லம். சரி சீக்கிரம் சாப்பிடு ரெக்கார்டிங்க்கு எல்லாம் ரெடி "

மூன்று பேரும் வேகமாக சாப்பிட்டார்கள், கையலம்பி உள்ளே சென்றார்கள், எல்லாம் ரெடியாக இருந்தது, ஜாபர் வேலையில் இறங்கினார், அவர்களுக்கு எப்படி என்று விவரித்தார்...

அவர்கள் இரண்டு பேருமே உடனேயே புரிந்துக் கொண்டு ஒரே டேக்கில் ரெக்கார்டிங் முடிந்துடும். அஜயும், தனமும் லிரிக்ஸை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் பிராக்டிஸ் செய்தார்கள். முடிந்தவுடன்,

"நாங்க ரெடி மாஸ்டர்!" என்று அஜய் கூறினான் .

"சரி" என்று ஒரு ரிஹர்ஸ் முடித்து விட்டு ரெக்கார்டிங்க்கு போனார் ஜாஃபர், ரெக்கார்டிங்கும் முடிந்து விட்டது.

 

"சரி மாஸ்டர் ஓகே தானே, நான் கிளம்பலாமா? டைம் ஆச்சு மாஸ்டர்!" என்றான் .

"எல்லாம் ஓகே அஜய், நீ கிளம்பு ராஜா  அடுத்த செட்டுக்கு உனக்கு போன் செய்யறேன் ராஜா!" என்று அவனை வாசல் வரை சென்று விட்டு விட்டு வந்தார். போகும்போது அம்மாவிடம் சென்று" நான் போயிட்டு வரேன்!" என்றான்.

"போயிட்டு வா, ஈவினிங் பார்க்கலாம் " என்று அவன் கன்னத்தை தட்டி அனுப்பி வைத்தாள் தனம்.

அடுத்து அவளுடைய சோலோ ரெக்கார்டிங், அது நடந்துக் கொண்டிருந்த போது அப்துல் உள்ளே வந்தான், உள்ளே ரெக்கார்டிங் நடந்து  கொண்டிருக்கிறதென்று கொஞ்ச நேரம் வெளியில் உட்கார்ந்தான். பிறகு போர் அடிக்கிறதென்று  கதவை திறந்து உள்ளே சென்றான், ரெக்கார்டிங் முடிவடையும் நேரம், அவன் பாடலைக் கேட்டான், சூப்பர் வாய்ஸ் ஆனால் இந்த வாய்ஸ் ரொம்ப பழக்கமானதாக இருந்தது, அவனுக்கு. ரொம்ப பரிச்சயமாக இருந்தது, யார் அந்த சிங்கர் என்று பார்க்க திரும்பினான், அதிர்ச்சியாக இருந்தது, இவள் இங்கே எப்படி வந்தாள், தனக்கு ஏன் இவ்வளவு நாளாய் தெரியாமல் இருந்தது என்று மனதுக்குள் போராடிக் கொண்டிருந்தான்.

எழுந்து ஜாஃபர் அருகே சென்றான், "வாப்பா வாப்பா!" என்று திக்கினான் ஆனால் வார்த்தை வரவில்லை.

ஜாஃபர், இவனுக்கு என்ன ஆச்சுன்னு "என்ன அபூ, ஏன் திக்கற? என்ன சொல்ல வரப்பா ? என்ன ஆச்சு உனக்கு?" என்று பதட்டத்துடன் கேட்டார்.

தனத்தை கை காட்டினான் அப்துல் "வாப்பா, தனம் வாப்பா…. தனம் வாப்பா.. " என்றான்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.