(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அப்படியா, நான் ஆபிசுக்கு போகல, இப்போ நேரா ஜோசியர் வீட்டுக்கு போறேன் அஜய், கல்யாணத்துக்கு நாள் பார்க்கணும் அதுக்கு தான் போறேன். "

"யாருக்கு கல்யாணம் தனம், உனக்கா?" அப்துல் கேட்கும்போது அவன் வார்த்தைகள் தழு தழுத்தன..

"இல்ல ஆது, என் தங்கைகளுக்கு தான் கல்யாணம், நேத்து தான் நிச்சயம் ஆச்சு அதான் போய் நாள் பார்க்க போறேன்!"

'நான் உன்னோட வரவா?"

"அது.... அது... இல்ல ஆது, நான் ஆட்டோலயே  போறேன்."

"ஏன் தனம் என்னோட வர இஷ்டமில்லையா?"

"அதுக்கில்ல, பாக்கறவங்க தப்பா நினைப்பாங்க ஆது ப்ளீஸ்... புரிஞ்சுக்கோயேன், தங்கச்சிங்க கல்யாண நேரத்தில இப்படி நீயும் நானும் ஜோடியா சுத்தினா நல்லாயிருக்காது, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ , நான் கிளம்பறேன்."

"தனம் நாம பேசனும் தனம், நிறைய பேசனும் தனம், நமக்கு ஒரு மகன் இருக்கான் தனம் என்னை பிரிச்சு பேசறியே."

"ஆதூ அதை பத்தி பேசறதுக்கு இது நேரமில்லை, வி ஆர் ஆல்வேஸ் குட் பிரெண்ட்ஸ் ஆது , இப்ப நான் கிளம்பவா?"

"சரி! " என்று மன விரக்தியோடு பதில் கூறினான்.

"அஜய் நான் போயிட்டு வரேன், ஈவீனிங் பாக்கலாம்! " அவன் தலை ஆட்டினான். தனம் விடு விடுவென்று நடந்தாள். சில அடி தூரத்தில் ஆட்டோ கிடைத்தது அவள் ஏறி போய்விட்டாள்,.அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்து வெளியே வரவா என்றிருந்தது.

அதை பார்த்த அஜயும் வேதனைபட்டான் ' என்ன ஆச்சு அம்மாவுக்கு ஏன் இப்படி அப்பாவை அவாய்ட் பண்ணிவிட்டாள்,' என்று நினைத்தான்.

அப்பாவின் முதுகை தடவி கொடுத்து "காலப் போக்கில் எல்லாம் சரியாயிடும் டாட், டோன்ட் ஒர்ரி!" அவனை தேற்றினான் அஜய்.

அப்துல் அவனை கட்டி தழுவிக் கொண்டான் "ஐ ஹோப் சோ டூ"

"அம்மா உங்கள நிறைய நினைச்சு ஏங்கினாள், ஆனா இப்போ உங்கள பார்த்தவுடன் ஏன் இப்படி பிஹேவ் பண்ணறான்னு தெரியல டாட்!"

"மே பி நான் வேற ரிலீஜியன் ...வேற மதம்னு நினைக்கிறாளோ, என்னவோ?"

"ஓஹ் நோ, அம்மா அப்படிலாம் இல்ல டாட், கொஞ்சம் டைம் கொடுங்க நான் பேசறேன்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.