(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அம்மாகிட்ட, கண்டிப்பா வி வில் ஒர்கவுட் சம்திங், டாட். நீங்க அம்மாவை கல்யாணம் பன்னிப்பீங்களா?  நம்ம உறவுக்கு ஒரு அர்த்தம் வேணும் டாட்!"

"கண்டிப்பா, உங்க அம்மீய நிக்கா செய்ஞ்சுக்கறேண்டா,  அதுக்காகத்தான் காத்துட்டிருக்கேன். நீதான் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்." அஜய் உரக்க சிரித்தான், அது ரோடு என்ற எண்ணம் கூட இல்லாமல் உரக்க சிரித்தான்.

"ஹேய் என்ன ஆச்சு அஜய், எதுக்கு இப்படி சிரிக்கிற, என்னோட கஷ்டம் உனக்கு சிரிக்கிற மாதிரி இருக்கா?"

அஜய் சிரித்துக் கொண்டே, " டாட் இல்ல, இந்த மாதிரி பசங்க, பெத்தவங்க கிட்ட கேட்பாங்க, பெத்தவங்க பிள்ளைகள் ஆசை பட்ட பெண்ணை சேர்த்து வைப்பாங்க. ஆனா இங்க உல்ட்டா, எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைடான்னு நீங்க கேட்கவும் எனக்கு சிரிப்பு வந்துடுத்து" இன்னும் கொஞ்சம் சிரித்து விட்டு,

"ஜோக்ஸ் அப்பார்ட், கண்டிப்பா நீங்க ரெண்டு பேறும்  ஒண்ணா சேரனும்

அதுதான் நீங்க அம்மாவுக்கு கொடுக்கும் மரியாதை, கவுரவம். ஷி இஸ் எ குட் ஹியூமன் பீயிங் டாட்! " என்று கூறும்போதே அவன் கண்ணில் கண்ணீர்.

"அஜய் சாரிடா, உனக்கும் உன் அம்மீக்கும் நான் செய்த துரோகம் ரொம்ப பெரிசு அதை எப்படி சரி செய்தாலும் அது பெரிய தப்பு, துரோகம் அதை சீர் செய்ய ஒரே ஒரு வழி, அவளை நிக்கா செய்யறதுதான். அதுக்குதான் அவகிட்ட பேசனும், நீ சொன்னா அவ கேட்பா, ப்ளீஸ் அஜய்! "

கண்டிப்பா பேசறேன் டாட் , இது உங்க ரெண்டு பேருக்காகவும் தான் நான் பேசப் போறது. "

"சரி இப்போ உங்களுக்கு ஒன்னும் வேலையில்லையே?"

"ஒன்னும் வேலையில்ல அஜய்!"

"அப்போ என்னோட வீட்டுக்கு வாங்க!"

"ஹ்ம்ம் உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு , நான் வரேன் உன் பின்னாடியே"

"டாட், இனி உன் வீடுன்னெல்லாம் சொல்லக் கூடாது, அது நம்ம வீடு!"

"சரிப்பா, நம்ம வீடு எங்கேயிருக்கு?"

அவன் அட்ரெஸை கொடுத்துவிட்டு, "என்னை ஃபாலோ பண்ணுங்க! "

"சரி அஜய்!"

அவர்கள் இரண்டு பேரும் வீடு போய் சேர்ந்தனர், வீடு வெளியே பார்க்கும் போது ரொம்ப பெரிதாக இருந்தது, மிகவும் அழகாக இருந்தது. அப்துலுக்கு ரொம்பவும் பிடித்தது , வீட்டு உள்ளே சென்றவுடன் நல்ல நேர்த்தியாக டெகரேட் செய்து வைத்திருந்தார்கள், "ரொம்ப நல்லாயிருக்கு வீடு! "என்று அஜயிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அஜய் உள்ளே சென்று சுமதி இல்லையே என்று உறுதி படுத்திக் கொண்டு வந்தான். "டாட் ஒரு

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.