அவர்களிடமிருந்து வாங்கி கொண்டான், தனத்தின் புறம் திரும்பினான் தாலியை காட்டி கண்ணால் ஜாடை காட்டி, கட்டி விடவா என்று பெர்மிஷன் கேட்டான்.
அவளும் புன்னகைத்து, தலையை ஆட்டினாள், அவள் வெட்கப் பட்டு தலை குனிந்தாள்.
ஜாஃபர் எல்லாவற்றையும் வீடியோ எடுத்தார்.
அப்போது பார்வதியிடம் லட்சுமி, "அந்த வீடியோவை வாங்கி நீ எடு பாரு, அவர் கல்யாணத்தை பார்க்கட்டும்!"
"சரிம்மா, குடுங்க அங்கிள்!" அவள் தன் கையில் வாங்கி எல்லோரையும் வீடியோ எடுத்தாள்.
அப்துல் தனத்தின் கழுத்தில் தாலியை கட்டினான், லட்சுமி அவனுக்கு எப்படி கட்டுவது என்று சொல்லிக் கொடுத்தார்
அவன் கட்டியதும் அவன் காலில் விழ சொல்லி , அவளுடைய அம்மா கூறவும், அவள் "இல்லைம்மா அதெல்லாம் வேண்டாம் இல்லையா ஆதூ?"
"ஆமாம் அதெல்லாம் வேண்டாம், நாங்க பிரெண்ட்ஸ் ஆண்ட்டி!"
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினார்கள்.
"ஜாஃபர் இருவரையும் அனைத்துக் கொண்டு இருவர் தலை உச்சியையும் முகர்ந்து, இனியாவது சந்தோஷமா இரு அபூ, உனக்கு நல்ல மனைவி கிடைச்சிருக்கா, எங்க தனம் தங்கம்டா அபூ!"
"வாப்பா, தனத்தை பத்தி என்கிட்டயே சொல்றீங்களா?"
"ஹ்ம்ம் ஆமாம் ராஜா, அவ எங்க மக எப்பவுமே, என்ன நிக்கத் நான் சொல்றது சரிதானே?"
"ஆமாங்க, அவ எப்பவும் நம்ம மக தான்."
அஜய் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தான், அது வந்ததும் செல்வமும், அவன் மனைவியும் எல்லோருக்கும் கொடுத்தார்கள். தனத்தை கூட்டிக் கொண்டு அவள் ரூமுக்கு சென்றான் அப்துல்.
"என்ன ஆதூ எல்லோரும் கீழே இருக்காங்க, நீ என்ன கூட்டிட்டு வந்திருக்க?"
"ஸ்ஷ்ஷ், சும்மா இரு தனம், நீ எவ்வளவு அழகு தெரியுமா? நான் நினைச்சு கூட பாக்கல உன்னை கண்டு பிடிச்சு நிக்கா செய்வேன்னு. சரி, என்று கையில் இருந்த நெக்லஸை அவள் கழுத்தில் போட போனான்,"
அவன் கையை பிடித்து கொண்டு " ஏய், இரு என்ன பண்ற? "
"என் அருமை மனைவிக்கு என்னோட முதல் பரிசு! " என்று நெக்லஸை திரும்பி போட போனான்
"இரு இப்ப எதுக்கு எனக்கு பரிசெல்லாம், எனக்குதான் முதல் அண்ட் தி பெஸ்ட் என் அஜயை