வரேன், பிறகு போன்ல பேசறேன், குட் நைட்!"
அஜயை பார்த்தான், அஜய் முகத்தில் ஒரு கேள்விக்கு குறி, வளர்ந்து விட்ட மகன் அவன் ஏதோ நினைக்கிறான் அது என்னவென்று அப்துலுக்கு புரிந்தாலும், அதை தெளிவு படுத்தும் நிலையில் அவன் இல்லை. தலையை ஆட்டி போறேன் என்று கூறிவிட்டு கிளம்பினான் .
சாய்ராவை தூக்கிக் கொண்டு, இம்ரானின் கையை பிடித்துக்கொண்டு காருக்கு சென்று விட்டான், நிக்கத் தனத்தை பார்த்து மெதுவாக "உள்ள வாயேன் உன்கிட்ட பேசணும்!" என்றார்.
அவளுக்கு தெரியும், அவர் என்ன கேட்க போகிறார் என்று, மனதில் பதிலை யோசித்துக் கொண்டே சென்றாள்.
"தனம், நீ அப்துலை இஷ்டப் பட்டுதான நிக்கா பண்ண, நாங்க வற்புறுத்தலையே?"
"இல்லையே ஆண்ட்டி, ஏன் உங்களுக்கு சந்தேகம்?"
"இல்லடா, ஏற்கனவே நான் வற்புறுத்தி செய்ஞ்ச நிக்கானால அவன் ரொம்ப மன வேதன பட்டுட்டான், அதான் இப்ப அவனும் நீயும் சின்ன வயசு பிரெண்ட்ஸ் அதான் நிக்கா செய்ஞ்சு வச்சுட்டேன் இனியாவது என் மகன் நிம்மதியா இருக்கணும்டா, நீ இங்க இருக்க சொன்னாத்தான் அவன் இருப்பான் இல்லேன்னா எங்களோட வந்துடுவான், நீ இருக்கற எடத்துலதான் அவன் சந்தோஷமே இருக்குடா அத இன்னிக்கு என் கண்ணால பார்த்துட்டேன், அவன் இங்கயே இருக்கட்டும்டா தனம்."
"ஆண்ட்டி...."
"ஆமாம்டா அவன் சந்தோஷமா இருக்கறது உனக்கும் சந்தோஷம்தான?"
அவள் யோசித்தாள், ஆமாம் இவ்வளவு நாளா அவனைத்தான் நினைச்சுண்டிருந்தேன், இப்ப என்ன திடீர்னு அவன் மேல அவ்வளவு கோவம், ஏன் அவன் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிடான்னா, என்ன இருந்தாலும் அவன் நீ காதலிச்சவன் இல்லியா? அவனை நினைச்சு எவ்வளவு உருகின, இன்னிக்கு காலைல எப்படில்லாம் பேசின அப்பறம் என்ன, போய் அவனை கூப்பிடு, பாவம் இனியாவது அவனுக்கு நிம்மதி கிடைக்கட்டும், ரெண்டு பேருமே நிம்மதியா வாழ்க்கையை தொடங்கலாம்.' அவள் மனசு அவள் நினைத்ததற்கு எதிராக வேலை செய்தது.
நிக்கத்தை எதிர்த்து ஒன்றும் பேசமுடியவில்லை அவர் கேட்பது சரியே. இவள், அவனை காதளித்தாள் தானே, சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
யாருக்கும் தெரியக் கூடாது என்று ஏதோ பேசிக் கொண்டே வந்தார் நிக்கத், அவளும் சிரித்துக் கொண்டே ஏதோ பதில் கூறினாள்.
அஜயும், ஜாஃபரும் கூட காருக்கருகில் நின்றிருந்தனர் அவளும் அவர்களை வழியனுப்ப வந்தாள், ஆனால் அவனை இருக்க சொல்லவில்லை , எல்லோரும் கிளம்பி விட்டார்கள்.