"என்ன குட் நியூஸா? என்ன குட் நியூஸ்மா?"
"அதுவா, எனக்கு மனேஜரா ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு, நேத்து அத சொல்லணும்னு நினைச்சிருந்தேன், ஆனா ஏதேதோ ஆயிடுத்து, அதனால சொல்லமுடியல, இன்னொன்னு நான் இன்னிக்கு சீக்கிரமே ஆபிசுக்கு போகணும், ஆதூ உன்னோட ரெசுமி எடுத்துக் கொடுத்தியானா அதையும் எச் ஆர்ல கொடுத்துடுவேன்."
"சரி சாப்டுட்டு போய் ஒரு பிரிண்ட் எடுத்துண்டு வரேன்."
'எங்க போய் எடுக்க போற, நம்மக்கிட்டயே பிரிண்டர் இருக்கு, உன்னோட ஈமைல்ல லாகின் பண்ணி பிரிண்ட் எடுத்துக் கொடு."
"ஓ குட், இப்பவே முடிச்சுடறேன்.'
"சரி வா சாப்பிடலாம்!"
தன் அம்மா அப்பாவை கூர்ந்து கவனித்தான் அஜய், இரண்டு பேரும் ஒத்து போறார்களா என்ன என்று கவனித்தான். "என்ன அஜய், என்ன நினைக்கற? நாங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் அஜய், கவலப் படாத!"
"அம்மா நான் நினைக்கறது உனக்கு எப்படி தெரியும்! "
"நான் உனக்கு அம்மா கண்ணா, எந்த நேரம் நீ எப்படி இருப்பன்னு எனக்கு நல்லா தெரியும்டா கண்ணா, நீ என்ன நினைக்கிறேன்னும் எனக்கு தெரியும்."
"வாவ் மா நோ சான்ஸ்!"
அவள் சிரித்துக் கொண்டே, "ஆது சீக்கிரம் வா நான் கிளம்பனும்."
"நீங்க ரெண்டு பேரும் சாப்டுண்டே இருங்க, நான் வந்து ஜாயின் செய்யறேன்." அவன் ரூமிலிருந்து குரல் கொடுத்தான்.
தனம் அவன் வருகைக்கு காத்திருந்தாள். " நீ சாப்பிடு நான் உங்கப்பா வந்தவுடன் சாப்பிடறேன்."
"ஏம்மா நீயும் சாப்டேன், அப்பா வருவார்."
'இல்ல அவனும் வரட்டும்."
அவளும், அவன் எப்படி வந்தான் என்று கேட்கவில்லை, அவனும் எதுவும் சொல்லவில்லை .
அஜயும் தன் அப்பா வரும் வரை காத்திருந்தான், அப்துல் பிரிண்ட் எடுத்து வந்துவிட்டான்.
"வா ஆதூ, ரொம்ப நேரம் ஆறது, வா!"
அவனும் வந்தவுடன் மூன்று பேரும் ஒன்றாக பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள்.
"சரி நான் கிளம்பறேன்!" தனம் எழுந்து கொண்டாள்.
"இரு நானும் வரேன், உன்ன விட்டுட்டு வரேன்!"