கொடுத்திருக்கியே? இது போதும் எனக்கு, ஏற்கனவே ஆண்ட்டி கொடுத்த நகையையே என்னால போட முடியல பாவம் அவங்கள டிசபாய்ண்ட் பண்ண கூடாதுன்னு தான் போட்டிருக்கேன், இதுக்கு மேல எனக்கு நகையெல்லாம் வேண்டாம் ஆதூ."
"மை தனம், குட்டிம்மா, லிசன், நான் கொடுக்கற கிப்ட் இது. நீ போட்டுக்கத்தான் வேணும், என்ன இப்படி பேசறேன்னு நினைக்கிறியா? ஆம்மாண்டா இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், நீ இதை போட்டுண்டா தான் நீ என்ன உண்மையா பிரெண்டா நினைச்சேன்னு எடுத்துப்பேன். "
"என்ன நீ ,ஒரு மாதிரி எமோஷனல் பிளாக் மெயிலா இருக்கு, இந்த மாதிரி ஒவ்வொண்ணுத்துக்கும் பண்ணமாட்டேன்னு என்ன நிச்சயம்?"
"ஹேய் என்ன நீ என்ன நம்ப மாட்டியா, எவ்வளவு ஆசையா இத உனக்காக கொண்டு வந்தேன், நீயும் என்னை நல்லா வச்சுக்க மாட்டியா, நான் இனி சந்தோஷமான வாழ்க்கை வாழ போறதா நினைச்சுண்டு இருக்கேன், நீ என்ன இப்படியெல்லாம் பேசற?"
"ஆதூ, உன் சந்தோஷத்தை போக்கறதுக்காக நான் ஏன் உன்ன கலயாணம் பண்ணிக்கணும் சொல்லு பார்க்கலாம், இதனாலெல்லாம் சந்தோஷம் போகாது, போகவும் கூடாது, நீ எனக்கு ஒன்னும் கிப்ட் கொடுக்கலேன்னா நீ என்னோட கணவனாக மாட்டியா என்ன? சரி உனக்கு இதுதான் ஆசைன்னா, இதோ போட்டு விடு."
அவன் இதுக்காகவே காத்துக் கொண்டு இருந்தவன் அவள் கழுத்தில் அந்த நெக்லஸை போட்டு விட்டான், "தேங்க்ஸ் தனம் , நீ வேண்டாம்னு சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமாயிட்டுது. அதான் அப்படிலாம் பேசிட்டேன், சாரி, உனக்காக நான் வாங்கிய கிப்ட், நீ வேண்டாம்னு சொன்னதும் மனசு ரொம்ப வலிச்சுது தனம், எனக்கு என் முதல் நிக்கா இஷ்டமில்லாம நடந்தது, அம்மீயோட ஆசைக்காக செய்ஞ்சுண்டேன் அப்பவே என் மனசுல யாரையோ எதுவோ என் மனச போட்டு குடைஞ்சுண்டிருந்தது, ஆனா அம்மீதான் நிக்கா முடிச்சுடணும்னு பார்த்தாங்க, நிக்கா முடிஞ்சதும் அவளோட ஆட்டம் ஆரம்பிச்சுடுத்து, அம்மீ, வாப்பா, என்ன, பசங்கள யாரையும் மதிக்கல, எப்பவும் எதுக்காவது சண்டை, பிள்ளைங்கள சரியா கவனிக்கல, அடிக்கறது, திட்டறது இப்படி என் வாழ்க்கைல ஒரு நிமிஷமும் நான் நிம்மதியா இருந்ததில்ல, நான் அஜயை பார்த்ததுக்கு பிறகுதான், என் மனசுல அந்த நினைவுகள் வந்தது, நாம சின்ன வயசுல பேசினது, நீ வயத்துல குழந்தையை சுமந்தது, நாம கலந்தது எல்லாம் அப்பத்தான் ஞாபகம் வந்தது."
"அப்ப என்ன தேடலியா?"
"தேடாம இருப்பனா? நான் ஊருக்கு போனப்ப நம்ம கூட படிச்ச ராஜாதான் சொன்னான் நீ ஊர்லயே இல்ல ரொம்ப வருஷமாச்சு, இந்த பக்கமே வரலன்னான், இதெல்லாம் என்