முத ராத்திரி?" நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்டாள் வள்ளி.
"வள்ளி வாயை மூடு, இனி தனம் எங்கவீட்டு பொண்ணு, இனி ஒரு முறை அவளை பத்தி ஏதாவது சொன்னேன்னு நினைச்சுக்கோ, எனக்கு கோவம் வரும், எனக்கு பொதுவா கோவம் வராது, ஆனா நீ என் தனத்த ஏதாவது சொன்னேன்னு வச்சுக்கோ கண்டிப்பா கோவம் வரும். தனம்மா சொல்லி வைங்க உங்க வள்ளி கிட்ட" அவர் முகம் கோவத்தில் சிவந்திருந்தது.
"என்ன வள்ளி, உங்க அக்காவை இவ்வளவு அசிங்கமா பேசற, நாளைக்கு அவ தயவுலத்தான் கல்யாணம் கட்டிக்க போற, வாய மூடிட்டு இரு, போற இடத்துல நல்ல படி குப்பை கொட்ட வேணாம்?" லட்சுமி ரொம்ப சாந்தமாக தன் மகள் வள்ளியிடம் கூறினார் .
"அம்மா நாங்க குடும்பம் நடத்த போறதில்லையா, குப்பதான் கொட்டப்போறோமா?" சமயம் தெரியாமல் ஜோக் அடித்தாள் பார்வதி .
"இவ வேற சமயம் தெரியாம, என்ன பொண்ணுடி நீ?"
தனம் அவர்களருகில் வந்தாள், "எல்லாரும் சாப்பிட்டீங்களா?"
"நாங்க சாப்பிட்டோம் தனம், நீங்க இன்னும் சாப்பிடல, நாங்க வீட்டுக்கு போகணும்."
"சரிம்மா, அப்புறம் நான் ஜோசியற பார்த்தேன், அவரு இன்னும் மூணு வாரத்துல நாள் நல்லாயிருக்கு அவங்க கிட்ட நாளைக்கு பேசறேன் அவங்க அந்த நாள ஒத்துண்டுட்டாக்க, நாம மத்த வேலைய பார்க்கலாம்மா. "
"சரிம்மா, அப்ப நாங்க கிளம்பட்டுமா? நீ இனியாவது சந்தோஷமா குடும்பம் நடத்தும்மா, இது நாங்க எதிர் பார்க்காத சந்தோஷம் தனம், ஒன்ன பத்தி ரொம்ப கவல பட்டுக கொண்டிரருந்தோம், ஆனா இப்ப உன் கல்யாணமும் நடந்து விட்டது, ரொம்ப சந்தோஷம்மா",
அவள் தலை குனிந்திருந்தாள், அப்துல் கீழே இறங்கி வந்தான்,தன் மூன்று குழந்தைகளும் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து பெருமிதம் கொண்டான், அஜய் டாக்டருக்கு படிக்கிறான், தன்னோட பிரென்ட், லவர் அவளே இப்ப மனைவியாகவும், நல்ல குணமுள்ள மனைவி, குழந்தைகள் இதை விட பெரிய செல்வம் என்ன வேண்டும் , தன் மனைவியை திரும்பி பார்த்தான், அவள் தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளருகில் போய் நின்றுக் கொண்டான், அவள் அவனை திரும்பி பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்தாள். அவனை பார்த்து, கண்ணால் என்ன வேண்டும் என்று வினவினாள்.
"ஒண்ணுமில்ல இன்னும் சாப்பிடலியே, உனக்கு பசிக்கல?"
"குழந்தைகளும் இன்னும் சாப்பிடலியா, அஜய், இம்ரான், சாய் இன்னும் சாப்பிடலியா நீங்கள்லாம்?"
"இல்லம்மா, சாய்ராவும், இம்ரானும் சாப்பிட்டாங்க, அஜய்த்தான் அம்மாவோடு சாப்பிடறேன்னுட்டான்" நிக்கத்தான் பதில் கூறினார்.