(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"ஆண்ட்டி நீங்களும் அங்கிளும் சாப்ப்டீங்களா ?"

"இன்னும் இல்லம்மா, உங்களுக்காக வெயிட் செய்யறோம், உங்க அம்மா அப்பாவை அனுப்பி வச்சுட்டு சாப்பிடலாம்."

"சரி ஆண்ட்டி!"

"ஆமாம்மா, நாங்க கிளம்பறோம், தனம்."

"சரிம்மா, அப்ப நாளைக்கு வீட்டுக்கு வரேன், மிச்சத்தை பேசலாம்மா."

"சரி நாங்க கிளம்பறோம் தம்பி, " அப்துலை பார்த்து கூறினார்.

"சரிங்க ஆண்ட்டி !"

"வீட்டுக்கு வாங்க தம்பி, தனம் கூட்டிட்டு வா!"

"சரிம்மா!"

நாங்க போயிட்டு வறோம் நிக்கத்தம்மா, போயிட்டு வரோம்ங்க!" ஜாபரை பார்த்து சொல்லிவிட்டு சென்றார்கள்.

எல்லோரும் சென்றவுடன் அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

"என்ன அஜய் நான் வெஜ் இல்லையா?"

"டாட், நானும் அம்மாவும் வெஜ் தான், நான் வெஜ் சாப்பிடமாட்டோம்."

"ஓ அப்படியா?"

"பாட்டிம்மா கூட வெஜ்தான் இல்ல பாட்டிம்மா?"

"ஆமா அஜய், நானும் வெஜ் தான், சின்ன வயசுலேர்ந்தே எனக்கு அந்த வாடையே பிடிக்காது, நிக்கா முடிஞ்சதும் ஜாஃபரும் வெஜ்ஜுக்கு மாறறேன்னுதான் சொன்னாரு, நான் தான் வேண்டாம்னுட்டேன்."

"ஐயோ பாட்டிம்மா, மாஸ்டருக்கு செம லவ் போலிருக்கு? சாரி மாஸ்டர்!"

"நீ பெரிய பையனாயிட்ட அஜய் பரவாயில்ல, தோளுக்கு மிஞ்சினா தோழனா நினைக்கணுமாம், நீ என் பிரெண்ட்தான் அஜய், என்ன வேண்ணா பேசு பரவாயில்ல ."

"ஐயோ மாஸ்டர் சும்மா கலாய்ச்சேன் அவ்வளவுதான்."

 இப்படியே ஏதேதோ பேசினார்கள்.

"அம்மா தனம், நம்ம அஜய்க்கு ஹீரோ சான்ஸ் கிடைச்சிருக்கு, நல்ல பணம்மா நீ என்ன சொல்ற?"

"நான்...... நான் சொல்ல என்ன இருக்கு அங்கிள், இது அவன் முடிவு பண்ண வேணும், அவன் ஒன்னும் இன்னும் சின்ன பையன் இல்லையே, அதனால அவனே முடிவு பண்ணட்டும் அங்கிள், ஆனா அவன் படிச்சிண்டுருக்கானே  அதுவும் மெடிசின் படிக்கறான், எதுவானாலும்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.