(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அப்துலுக்கு,நிக்கத்துக்கு,ஜாபருக்கு மூவருக்குமே மனம் வலித்தது, இன்னிக்கு நிக்கா ஆகி மகன் இப்ப மனைவியை விட்டு விட்டு தங்களோடு வந்து கொண்டிருக்கிறான், என் பையனுக்கு என்னிக்குத்தான் சந்தோஷம் கிடைக்குமோ என்று ஜாபரும், நிக்கத்தும் நினைக்க,

ஏன் தனம் என்னை இருன்னு சொல்லல, என் மேல கோவமா, வெறுப்பா, அஜய்காகதான் என்ன நிக்கா பண்ணியா தனம், என்னை ஆசை ஆசையா ஆதூ அதூன்னு கூப்பிடறியே அதெல்லாம் சும்மாவா, உனக்கு என் மேல ஆசையோ பாசமோ இல்லியா, என்ன இங்கேயே இரு ஆதூன்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேண்டா...

ஆதூ சாரிடா, நீ இங்க என்னோட இருக்கணும்னுதான் எனக்கும் ஆசை ஆனா, நமக்கு வளர்ந்த மகன் இருக்காண்டா, அதான் சொல்லல, உனக்கு கோவமா, ஆது ஐ மிஸ் யு டா, நீ கிளம்பின வேகம் பார்த்தா என் மேல கோவத்தோட கிளம்பின மாதிரி இருக்கு, அப்படியா என் மேல என்னடா கோவம்? நேராவே என் கிட்ட கேட்டிருக்கலாமில்ல, இல்ல உரிமையோட, நான் இங்க தான் இருக்க போறேன்னு சொல்லியிருக்கலாமில்ல, டோன்ட் யு மிஸ் மீ ஆதூ?

இவள் தன் ரூமில் சத்தமாகவே பேசினாள் அதை வெளியில் இருந்த அஜய் கேட்டுக் கொண்டிருந்தான், அவன் அப்பத்தான் அம்மாவிடம் பேசவேண்டுமென்று அவள் ரூமுக்கு வந்தான் அப்போதுதான் அவள் தன் கணவனிடம் தன் மனதில் உள்ளதை மானசீகமாக பேசிக் கொண்டிருந்தாள் அதை கேட்ட அஜய் சத்தம் செய்யாமல் கீழிறங்கி போய் விட்டான்,

அப்துலுடைய  போன் ரிங் வந்தது, அவனுடைய வீட்டு வாசலில் இருந்தனர், காரிலிருந்து இறங்கி அந்த போனை எடுத்து பேசினான்,

அம்மாவிடம் ஏதோ கூறினான்,

தனம், அப்துலை நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள், நடு ராத்திரி விழிப்பு வந்து எழுந்துக்  கொண்டாள், தன்னையும் அறியாமல், 'ஆதூ என்ன தூங்க விடு, ஏன் என் கனவிலயும் வந்து தொந்தரவு செய்யற  போடா ப்ளீஸ்! '

"கனவிலே கூட வந்து தொந்தரவு பன்றேனா? ம்ம்... அப்படியா?"

அவள் குரல் கேட்டு அதறி பதறி எழுந்தாள், பக்கத்துல யாரையுமே காணோம், சே ஏன் இவன் இப்படி தொந்தரவு பன்றான், ' என்று அலுத்துக் கொண்டே புன்னகையுடன், தண்ணியை எடுத்து குடித்தாள், பிறகு மறுபடியும் படுத்துக்க கொண்டாள் .

"தூங்குடா, நல்லா தூங்கு உன் ஆதூ உன் பக்கத்துல தான் இருக்கேன் நல்லா தூங்கு!"

'ஆதூ நீ என்ன மிஸ் பண்றியா? நான் உன்ன மிஸ் பண்றேன், ஆமா நீ ஏன் என்கிட்டே உரிமையா, நானும் உன்னோடத்தான் இருப்பேன்னு சொல்லல?' என்று தன் மனதில் உள்ளதை உரக்க கூறிக் கொண்டிருந்தாள் யாரும் அங்கே இல்லையென்று,

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.