(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

'நீதான் என்ன கல்யாணத்துக்கு பின்னாடி என்னோட இருக்கணும்னு கல்யாணத்த சாக்கா வச்சு சொல்லக் கூடாது, உன்னோட பெற்றவர்களையும், உன் பிள்ளைங்களையும் விட்டுட்டு உன் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு சொன்ன'

'என்ன ஆதூ இங்கதான் இருக்கியா இல்ல என் மனசாட்சியா, உன் குரல் நீ நேர்ல பேசற மாதிரி கேட்குது, ஆதூ....... ஆது....இங்கதான் இருக்கியா ஆதூ?'

"......."

"ஏன் ஆதூ இப்படி என்ன தொல்லை பண்ற, எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்குடா, நான் தூங்கணும். "

"தூங்கு யார் உன் கைய பிடிச்சாங்களாம், தூங்குடா!"

அவளுக்கு நிச்சயம் ஆயிற்று, யாரோ இங்க இருக்காங்க, அஜய்க்கும் அவன் குரல் தான், ஏய் அஜய் நீதான் இங்க இருக்கியா, உங்க அப்பா மாதிரியே பேசறியா, வாலு இங்க வா!"

"....."

குரல் வரவேயில்லை, எழுந்து வெளியே போய் பார்த்தாள் யாருமே இல்லை, சே வெறும் பிரம்ம தானா, சே என்று மறுபடியும் படுத்து விட்டாள். சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்.

காலையில் கொஞ்சம் லேட் ஆயிடுத்து அவள் எழுந்துக் கொள்ள.

அவள் கண் முழித்து பார்க்கும் போது அவள் பக்கத்தில் அப்துல் படுத்துக் கொண்டிருந்தான். 

"ஆதூ....ஆதூ, எழுந்திரு, நீ எப்ப வந்த இங்க?"

அவன் நல்ல தூக்கத்திலிருந்ததால் கிடு கிடுவென்று எழுந்தான், ஒரு நிமிடம் ஆயிற்று தான் எங்கிருக்கிறோமென்று தெரிவதற்கு .

'ஓ தனம், தனம் நான் இங்க எப்படி எப்போ வந்தேன்?"

"ஏய் என்ன விளையாடறியா? என்ன விளையாட்டு இது?"

"நான் கேக்க வேண்டியதெல்லாம் நீ கேக்கறியா? நான் எப்படி இங்க வந்தேன்னு நீ சொல்லு?"

"என்ன உனக்கு இன்னும் சின்ன பையன்னு நினைப்பா, இருப்பது வயசுல மகன் இருக்கான் ஞாபகம் இருக்கில்ல, என்ன விளையாட்டு, அவன் என்ன நினைப்பான் வெக்கமாயில்ல உனக்கு, ஆமாம் உனக்கு என்னிக்கு வெட்கமெல்லாம் இருந்திருக்கு?"

"ஏய் என்ன நீ, நேத்துதான் நிக்கா ஆயிருக்கு, இன்னிக்கு இப்படி சண்டை போடற? என் மேல ஆசையோ பாசமோ இருக்கா உனக்கு?"

அவள் தலை குனிந்தாள், "சாரி ஆதூ, என் மனசு ரெண்டு விதமா யோசிக்குதுடா, அதான் உன்னோட ஒத்தும் போகமுடியல, உன்ன விட்டும் இருக்க முடியல? என்ன பண்றதுன்னு தெரியல?"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.