அவளோட கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு, "லுக் தனம், நீ ரொம்ப யோசிக்கற, இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் நிக்கா ஆயிடுத்து, இனி புருஷன், பொண்டாட்டியா வாழ்க்கையை ஆரம்பிப்போம், அது நாளைடைவில் எல்லா குழப்பத்தையும் தீர்த்து விடும், கவலப் படாத பீவி,"
"என்னது? பீவியா?"
"ஹ்ம் பீவி, ஒயிஃப்"
"யப்பா நல்லா தமிழ்ல பேசுப்பா, எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது.... சாரி ஆதூ, நான் கிண்டலடிக்கல, ஆனா நிஜமாவே புரியலப்பா, சீரியஸா புரியற மாதிரி பேசு."
"சரிடி உனக்கு புரியற மாதிரியே இனி பேசறேன்."
"என்ன 'டீ'யா? "
"ஆமாம் நீ 'டா' ன்னு சொல்லலியா? அப்படித்தான்."
"ஓ! அப்படியா? அப்ப சரிங்க புருஷனே!"
"சரி, ஜோக்ஸ் அபார்ட், இனி என்ன செய்யணும்னு நீ சொல்லு, நீ என்னை நினச்சு ஏங்கறது தெரிஞ்சுடுத்து, இதுக்கு மேல உன் மனசுல இருக்கறத என் கிட்ட மறைக்காத, அது நல்லாயில்ல, நல்லதுக்குமில்ல, இனி உனக்கும் எனக்கு எந்த ஒளிவு மறைவும் வேண்டாம்."
"சரி உனக்கு தான் எல்லாமே தெரிஞ்சுடுத்தே அப்புறம் என்ன?, சரி நீ என்ன பண்ற, வேலையா, பிஸினஸா?"
"ரெண்டுமில்ல, சும்மாதான் இருக்கேன்!"
"என்ன சொல்ற? நீ சாப்ட்வேர் எஞ்சினியர் இல்ல?"
"ம், ஆமாம்! "
"அப்ப! ஒரு என்ஜினியர் வெட்டியா உட்கார்ந்திருக்கியா, அப்பா சம்பாத்தியத்துல சாப்பிட்டுட்டிருக்கியா, வாட் எ க்ஷேம் ஆதூ!"
"ஏய் என்னடா சொல்ற?'
'சாரி ஆதூ, நான் அப்படி பேசக்கூடாது, ஆனா யு ஹவ் வேஸ்ட்டட் தி ஹோல் டைம்! "
"ஐ நோ தனம், என்னோட சிச்சுவேஷன் உனக்கு தெரியாது, என்னை, எங்க வீட்ல எதுவுமே செய்யவிடல, என் ஒயிஃப் வாப்பாவோட சொத்து இருக்கு அத எழுதி வாங்குன்னு தொந்தரவு செய்தாள்.
அம்மீயோ, நமக்குத்தான் நிறைய சொத்து இருக்கு இன்னும் என்ன வேல, உன் சந்தோஷத்துக்காக படிச்ச டிக்ரீ வாங்கின, வாப்பாவோட மியூசிக்ல சேர்ந்துக்கன்னு சொல்லிட்டாங்க , பொழுது விடிஞ்சா பொழுது போனா என்