(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

ஒயிஃப்போட பஞ்சாயத்து, இதுதான் என்னோட விதின்னு இருந்தப்போதான் உன்ன பத்தி என் நினைவில் வந்து நான் துடி துடிச்சேன் , அதுக்கு பிறகு நம்ம ஊருக்கு போய் உன்ன பார்க்கலாம்னு போனேன் அப்பத்தான் அவ, அவங்க அண்ணன் வீட்டுக்கு போறேன்னு  கிளம்பி போயிருக்கா, அம்மீ இப்ப போகாத, அபூ வந்தவுடனே சொல்லிட்டு போகலாம்னு சொல்லியிருக்காங்க, ஆனா அவ பிடிவாதமா போயிருக்கா, வழில பஸ் ஆக்சிடெண்ட்ல ஸ்பாட்ல, இறந்துட்டா. ஒரு உயிரு போனது வருத்தம்தான், ஆனா அவ போனதிலிருந்து நானும் எங்க குடும்பமும் நிம்மதியா இருக்கோம், இப்ப சொல்லு என் வாழ்க்கையில நான் வேலைக்கு போறத பத்தி நினைக்கவே எனக்கு நேரமில்லை, மனசுமில்ல?'

"எதுவா இருந்தா என்ன, படிச்ச படிப்ப யாராவது வேஸ்ட் பண்ணுவாங்களா? அதான் நான் அப்படி சொன்னேன். உத்தியோகம் புருஷ லக்ஷணம், ஆதூ, இப்பவாவது ஏதாவது வேலைய தேடு."

"இந்த வயசுல எங்க கிடைக்கும் ?"

"நீ என்ன அப்படி கிழவனாவா ஆயிட்ட, உனக்கு முப்பத்தியாறு வயசுதான் ஆகுது கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும், முதல்ல சம்பளம் குறைவாகத்தான் இருக்கும், போக போக உன் டேலண்ட ப்ரூவ் பண்ணு, கொஞ்ச கொஞ்சமா முன்னேறலாம். "

"ம்..... இனி இந்த வேலைய ஆரம்பிக்கனுமா?"

'ஆமாம் சார், கண்டிப்பா ஆரம்பிக்கணும், உன்னோட ஒரு ரெசுமி எனக்கு கொடு, என்னோட எச் ஆர்ல கொடுக்கறேன், ஏதாவது ஓப்பனிங் இருந்தா சொல்லுவாங்க. "

'சரி, என்னோட லேப்டாப்ல இருக்கு பிரிண்ட் செய்து தரேன். '

" அப்புறம், உன்கிட்டயும், அஜய் கிட்டயும் ஒரு குட் நியூஸ் சொல்லணும்."

"குட் நியூஸா, என்ன அது?"

"அதான் சொன்னேனே அஜயும் இருக்கனும் அப்பத்தான் சொல்வேன்."

"சரி சரி வா வெளியே போலாம் அப்பத்தான் குட் நியூஸ் என்னன்னு தெரியும்!"

ரெண்டு பேரும், குளித்து ரெடியாகி கீழே வந்தனர், "ஹப்பா, இப்பவாவது வந்தீங்களே, ரொம்ப பசிக்குது உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன், சீக்கிரம் வாங்க எனக்கு பசிக்குது," அம்மாவையும் அப்பாவையும், சேர்ந்து  அணைத்துக்

 கொண்டான், அஜய்.

'ஹேய் குட் மார்னிங் அஜய், என்னடா ரொம்ப பசிக்குதா?, ஏன் என்னை எழுப்பல, எழுப்பியிருக்கலாமில்ல? வா சாப்பிடலாம்." தனம் தன் மகனிடம் கூற ,

"இந்த கதையே வேணாம், நீதான ஏதோ குட் நியூஸ் சொல்றேன்ன, அத முதல்ல சொல்லு!"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.